இணையத்தில் ட்ரோல் செய்யப்படும் லொஸ்லியாவின் கல்லூரி கால புகைப்படம் !

புதன், 7 ஆகஸ்ட் 2019 (14:56 IST)
பிக்பாஸ் மூன்றாவது சீசனில் இலங்கையைச் சேர்ந்த மாடல் அழகி லொஸ்லியா அங்கிருக்கும் செய்தி நிறுவனம் ஒன்றில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி தற்போது தமிழ் பிக்பாஸ் சீசன் 3ல் பங்கேற்றுள்ளார். 


 
ஆரம்பத்தில் ஓவியா ரேஞ்சிற்கு ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த லொஸ்லியா பின்னர் நாட்கள் செல்ல செல்ல கொஞ்சம் கொஞ்சமாக வெறுப்பை சம்பாதித்து தந்து ரசிகர்களே வெறுக்கும் அளவிற்கு மாறிவிட்டார். அதற்கு முக்கிய காரணமே கவினுடனான அவரது நட்பு தான். இதனால் சில நாட்களாகவே சமூக வலைத்தளங்களில் லொஸ்லியவை மிகவும் மோசமாக ட்ரோல் செய்து மீம்ஸ்களை  உருவாக்கி கிண்டலடித்து வருகின்றனர். 


 
அந்தவகையில் தற்போது கல்லூரி விழா ஒன்றில் லொஸ்லியா நடனம் ஆடுவது போன்ற வீடியோ ஒன்று சில நாட்களுக்கு முன் வெளியாகி வைரலானது. அந்த வீடியோவில் ஆள் அடையாளமே தெரிமால் ஒல்லியாகவும், விதியசமாகவும் காணப்பட்டார். அதை தற்போது நெட்டிசன்ஸ் பலரும் கிண்டலடித்து ட்ரோல் செய்து வருகின்றனர்.  ஆனால் இதில் இருப்பவர் உண்மையாகவே லொஸ்லியாவா தான் என்று தெரியவில்லை.  

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் தமிழ் பேச வரும் சமந்தாவின் ‘ஓ பேபி’ – சுதந்திர தின ரிலீஸ்!