கைதி ரீமேக்கா? அகண்டாவோடா ரீமேக்கா? – வெளியானது போலா டீசர்!

Webdunia
செவ்வாய், 22 நவம்பர் 2022 (12:09 IST)
தமிழில் வெளியாகி ஹிட் அடித்த கைதி படத்தின் ரீமேக்கான ‘போலா’ இந்தி படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து வெளியான படம் ‘கைதி’. இந்த படத்தில் கார்த்தி ‘டில்ல்’ என்ற கைதி கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் தமிழில் பெரும் ஹிட் அடித்த நிலையில் இதை இந்தியில் ரீமேக் செய்யும் முயற்சிகள் தொடங்கியது.

இந்தியில் இந்த படத்தை அஜய் தேவ்கனே நடித்து, இயக்கியும் உள்ளார். இந்த படத்திற்கு இந்தியில் ‘போலா’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகி இந்தி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள அதேசமயம் தமிழ் ‘கைதி’ ரசிகர்களின் அதிருப்தியும் பெற்றுள்ளது.



படத்தில் அஜய் தேவ்கன் கையில் சூலத்துடன் தோன்றும் காட்சிகள் பாலகிருஷ்ணாவின் அகண்டா படத்தை நினைவுப்படுத்துவது போல உள்ளதாக சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் சிலர் கைதி படத்தில் இருந்த எதார்த்தம் இதில் இல்லாததாகவும், அதிகமான மாஸ் பில்டப் வசனங்கள் உள்ளதாகவும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

தமிழில் ஹிட் அடித்த விக்ரம் வேதா படம் இந்தியில் ரீமேக் ஆனபோதும் இதுபோன்ற விமர்சனங்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

Edit By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தீயசக்தின்னு சொன்னா இப்டிதான்!.. ஜனநாயகனுக்கு எதிரா பராசக்தியை இறக்குறாங்களே!...

அஜித்தின் ‘மங்காத்தா’ ரீரிலீஸ்.. ஜனநாயகன் படத்திற்கு நெருக்கடியா?

மோதி பார்த்திடலாம்.. ஈரோடு கூட்டத்திற்கு பராசக்தி ரிலீஸ் தேதி மாற்றமா?

திலீப் மீது புகார் கொடுக்காமல் தற்கொலை செய்திருக்க வேண்டும்: மலையாள நடிகை..

ஒரு ஆக்சன் காட்சி கூட இல்லாத படத்தில் டாம் குரூஸ்.. ஆஸ்கர் விருதுக்கு குறிவைப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments