Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் படிப்பு முடிந்ததும் ராணுவ பயிற்சியை கட்டாயமாக்க வேண்டும்: கங்கனா ரனாவத்

Webdunia
வியாழன், 12 அக்டோபர் 2023 (15:40 IST)
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு இளைஞர்களுக்கும் படிப்பு முடிந்த பின்னர் ராணுவத்தில் சில ஆண்டு காலம் பணியாற்ற வேண்டும் என்று கட்டாயமாக வேண்டும் என்று நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.  
 
சமீபத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசிய போது, ‘“படிப்பை முடிக்கும் ஒவ்வொருவருக்கும் நாட்டில் ராணுவப் பயிற்சியை கட்டாயமாக்கினால் ராணுவத்தில் இருக்கும் சோம்பேறிகளையும் பொறுப்பற்றவர்களையும் ஒழிக்க முடியும். அது அவர்களிடம் ஒழுக்கத்தை வளர்க்கும் என்று கூறியுள்ளார்.
 
சீனா, பாகிஸ்தான் மீது பாலிவுட் கலைஞர்கள் அன்பை பொழிகின்றனர், கிரிக்கெட் வீரர்கள் அவர்களை கட்டியணைக்கின்றனர். ஆனால் நான் மட்டும்தான் அவர்களை எதிரிகளாக நினைக்கிறேனா? 
 
இரு நாடுகளுக்கும் இடையே உள்ள பகை எனக்கு மட்டும்தானா? இதற்காகத்தான் நாங்கள் ‘தேஜஸ்’ என்ற திரைப்படத்தை உருவாக்கியுள்ளோம். வீரர்கள் எல்லையில் சண்டையிடும் நேரத்தில், நாட்டு மக்கள் அவர்களின் முதுகுக்குப் பின்னால் பேசும்போது ஒரு ராணுவ வீரர் எப்படி உணருகிறார் என்பதே இந்த படத்தின் கதை.
 
கங்கனா ரணாவத் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள ‘தேஜஸ்’ படத்தின் படப்பிடிப்புப் பணிகள் முடிந்து தற்போது இறுதிகட்டப் பணிகள் நடந்து வருகின்றன. இந்த படம் அக்டோபர் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
 
Edited by siva

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments