Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

100 கோடி கிளப்பில் ஜாலி எல்எல்பி 2

100 கோடி கிளப்பில் ஜாலி எல்எல்பி 2
, வெள்ளி, 24 பிப்ரவரி 2017 (12:06 IST)
பாலிவுட்டில் தயாரிப்பாளர்கள் விரும்பும் நடிகர் அக்ஷய் குமார். திரையரங்குகள், விநியோகஸ்தர்கள் என அனைவருக்கும்  இவரைப் பிடிக்கும்.

 
கான் நடிகர்களைப் போல் இரண்டு வருடங்களுக்கு ஒரு படம் நடிப்பதில்லை. வருடத்துக்கு நான்கு ஐந்து படங்கள்  நடித்துவிடுகிறார். அந்த படங்கள் அனைத்தும் 100 கோடி கிளப்பில் சேரவும் செய்கின்றன.
 
இரண்டு வாரங்களுக்கு முன் வெளியான ஜாலி எல்எல்பி இரண்டாம் பாகம் 13 தினங்களில் 102.44 கோடிகளை இந்தியாவில் மட்டும் வசூலித்துள்ளது. வெளிநாடுகள், ஆடியோ, தொலைக்காட்சி உரிமை அனைத்தையும் சேர்த்தால் 200 கோடிகளை  தாண்டும்.
 
அக்ஷய் குமாருக்கு 40 கோடிகள் சம்பளம் தந்து, 70 கோடியில் ஒரு படத்தை எடுத்தாலும் தயாரிப்பாளர் லாபம் பார்க்கலாம். அந்தவகையில் பாலிவுட்டை செழிப்புடன் வைத்திருப்பது அக்ஷய்யின் படங்கள்தான்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விவாகதத்து விவகாரம்: சுசித்ராவின் கணவர் கதறல் விளக்கம்!!