Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகாபாரதத்தின் அஸ்வத்தாமன் உயிருடன்?

Shruthi Agarwal
சனி, 29 செப்டம்பர் 2007 (16:36 IST)
webdunia photoFILE
ஆஸீர்கார் கோட்டை... மர்மங்களும் ரகசியங்களும் நிறைந்த கோட்டை. இந்தக் கோட்டையில் உள்ள சிவன் கோயில் மகாபாரதக் கதையில் துரோணாச்சாரியாரின் மகனான அஸ்வத்தாமனை வழிபடும் இடம் என்பது அனைவரும் அறிந்ததே. இதைப்பற்றி கேள்விப்பட்டவுடன் நாம் இந்த செய்தி உண்மையா என்பதை அறிய நமது குழு அங்கு சென்றது. ஆஸீர்கார் கோட்டை புர்ஹான்பூருக்கு 20 கிமீ அருகில் உள்ளது. இந்த கோட்டைக்கு அருகே வசிக்கும் மக்களிடம் இது குறித்தத் தகவல்களை திரட்டினோம்.

இந்த கோட்டையை பற்றி ஒவ்வொருவரும் ஒவ்வொரு கதையை கூறினர். ஒருவர் தனது தாத்தா இங்கு அஸ்வத்தாமனை பலமுறை உயிருடன் பார்த்ததாக தன்னிடம் கூறியதாகத் தெரிவித்தார். இன்னொருவர் கூறுகையில ், அங்குள்ள குளத்தில் தான் மீன் பிடிக்க சென்றதாகவும ், அப்போது தன்னை யாரோ குளத்தினுள் தள்ளி விட்டதாகவும் கூறியதோடு, தள்ளி விட்ட நபர் அஸ்வத்தாமன் என்றும் இங்கு யாரும் வருவதை அஸ்வத்தமன் விரும்பவில்லை என்றும் கூறியபோது நமக்கு சற்று ஆச்சரியம் கூடியது. வேறொருவரோ அஸ்வத்தாமனை இங்கு பார்த்தவர்கள் புத்தி பேதலித்துப் போனதாக அதிர்ச்சித் தகவலை அவிழ்த்து விட்டார்.

webdunia photoFILE
இவர்கள் கூறிய விஷயங்களுடன் கோட்டையை அடைந்தோம். தற்போது கற்காலத்தில் உள்ள ஒரு நினைவுச் சின்னம் போல் ஆகிவிட்டிருந்தது. 6 மணிக்கு மேல் இந்த கோட்டை பயங்கரமான இடமாக தெரிந்தது. அரை மணி நேரம் கோட்டையின் பெரும் கதவை தட்டினோம்... தட்டினோம்...

எங்களுடன் கிராம தலையாரி ஹருண் பேக ், வழிகாட்டி முகேஷ் காத்வால ், மேலும் அந்த ஊரைச் சேர்ந்த சிலர் இருந்தனர். அரை மணி நேரத்திற்கு பிறகு கோட்டைக் கதவு திறந்தது... உள்ளே ஒரு கல்லறை... இது பிரிட்டிஷ் காலத்தைச் சேர்ந்த்து என்று வழிகாட்டி முகேஷ் கூறினார்.

webdunia photoFILE
இங்கு கொஞ்ச நேரம் இருந்துவிட்டு பயணத்தை தொடர்ந்தோம்... ஒரு குளம் பல பகுதிகளாக பிரிக்கப்பட்டிருந்ததை பார்த்தோம். கோயிலுக்கு போகும் முன் அஸ்வத்தாமன் இந்த குளத்தில் குளிப்பதாக ஒரு சிலர் கூறுகையில், வேறு சிலரோ கோயிலுக்குப் போகும் முன் அஸ்வத்தாமன் உதவாலி நதியில் குளிப்பதாக தெரிவித்தனர். அந்த குளத்தில் மழை நீர் தேங்கியிருந்தத ு, அலை இல்லாததால் பாசி பிடித்திருந்தது. புர்ஹான்பூரின் கொதிக்கும் வெயிலிலும் இந்த குளம் வற்றாது இருப்பதை ஆச்சரியத்துடன் நாங்கள் பார்த்துக் கொண்டிருந்தோம்.

இன்னும் சில தூரம் சென்ற போது குற்றம் செய்பவர்களை தூக்கிலிடுவதற்கான இரண்டு இரும்பு கோணங்கள் இருந்ததைக் கண்டோம். இங்கு மரணத்திற்கு பிறகும் உடல் தொங்கவிடப்படும் பயங்கரத்தை மக்கள் தெரிவித்தனர். பிறகு எலும்புகள் கோட்டையில் உள்ள ஒரு பள்ளதாக்கில் விட்டெறியப்படும் என்பதை தெரிந்து கொண்டோம். அங்கிருந்து சில நிமிடங்களில் புறப்பட்டோம். சிறிது நேரத்திற்கு பிறகு குப்தேஷ்வர மகாதேவ கோயில் பகுதியை அடைந்தோம். கோயிலை சுற்றிலும் பள்ளத்தாக்காகவே இருந்தது. இந்த பள்ளத்தாக்குகள் ரகசிய பாதைகளை கொண்டது என்று கூறினார்கள். இதன் வழியாக சென்றால் கந்தவா வனம் (கந்தவா மாவட்டம்) வழியாக கோயிலுக்கு செல்லலாம். பள்ளத்தாக்குகளால் சூழப்பட்டுள்ள இந்த கோயிலினுள் சுழற்படிக்கட்டுகள் வழியே சென்றோம். படிக்கட்டுகளில் ஏறி போவது என்பது உயிரைப் பணயம் வைப்பதற்கு சமம். தவறாக ஒரு அடி வைத்தாலும் மரணம்தான்.

webdunia photoFILE
கோயிலுக்குள் நுழைந்தோம். யாரோ ஒருவர் வழிபாடு செய்து கொண்டிருந்தார். சிவலிங்கத்தில் சிகப்பு வண்ணம் பூசப்பட்டும ், தேங்காய் சிதறல்களையும் கண்டோம். இங்கு முழு ராத்திரியும் தங்க முடிவு செய்தோம்... ஆனால் நடு ராத்திரி... முகேஷ் எங்களை உடனடியாக இந்த இடத்தை விட்டு கிளம்புங்கள் என்று கூறினார். ஆனால் நாங்கள் மறுக்கவே அவரும் எங்கள் கூடவே இருந்தார்.

இரவு 2 மணியளவில் வெப்ப நிலை கடுமையாக குறைந்தது. எங்கு ஆவிகள் இருக்கிறதோ அங்கு வெப்ப நிலை கடுமையாக குறையும் என்று எங்கோ படித்தது நினைவிற்கு வந்தது. எங்களுடன் வந்தவர்களுக்கு பயம் பிடித்து ஆட்டியது.

webdunia photoFILE
அனைத்துமே பயங்கரமாக இருப்பது போன்ற தோட்டத்தை அது எழுப்பியது. நாங்கள் 4 மணி வரை இருந்தோம். சூரியன் தனது கிரணங்களை பூமியின் மீது தெளிக்கும் நேரம ், ஹருண் என்பவர் குளத்தை கவனிக்குமாறு வலியுறுத்தினார். குளத்தின் அருகே சென்றோம்... நன்றாக கவனித்தோம் அங்கு சந்தேகப்படும்படியாக எதுவும் தென் படவில்லை. கோயிலுக்கு திரும்பினோம் அங்கு... சிவலிங்கத்தின் மீது ரோஜாப்பூ ஒன்று இருந்ததை பார்த்தபோது உடல் சிலிர்த்தது. யார் இந்த பூவை வைத்தனர ், இது ஏதாவது தில்லுமுல்லா... அல்லது அஸ்வத்தாமன் வந்தார ா?

இந்த நம்பிக்கையின் துவக்கம ்

webdunia photoFILE
புர்ஹான்பூர ், சேவாசதன் மஹாதேவாலய பேராசிரியர் டாக்டர் மொகமத் ஷஃபி இந்த நம்பிக்கையின் பின்னணியை தெரிவித்தார். புர்ஹான்பூரின் வரலாறு மகாபாரத காலத்துடன் தொடர்புடையது என்று அவர் ஆரம்பித்தார். முன்னதாக இந்த கோட்டை கந்தவா வனத்துடன் தொடர்பு படுத்தப்பட்டத ு, 1380 ல் ஃபருக்கிய பேரரசின் பேரரசர்களால் உருவாக்கப்பட்டது. அஸ்வத்தாமன் பற்றிய நம்பிக்கை எப்போது வந்தது என்று கேட்டபோது, தனது குழந்தை பருவத்திலிருந்தே இந்த நம்பிக்கை பேசப்பட்டு வருவதாக மொகமத் ஷஃபி தெரிவித்தார். இதெல்லாம் அவரவர் சொந்த நம்பிக்கைகள் சார்ந்தது. ஆனால் இந்த கோட்டையில் ஏகப்பட்ட குகைகள் உள்ளன என்பதும் இந்த குகைகளின் முடிவு எது என்பது அறிய முடியாதது என்பதும் உண்மையே.

ஷ்ருதி அகர்வால்.

அஸ்வத்தாமன் யார் ?

இந்த ராசிக்காரர்களுக்கு வீண் அலைச்சல், நேர விரயம் ஏற்படலாம்!– இன்றைய ராசி பலன்கள்(27.11.2024)!

சபரிமலை ஐயப்பனை தரிசிக்க விரும்பும் பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்..!

2025ம் ஆண்டில் இந்த 3 ராசிக்காரர்கள்தான் பணக்காரர்கள்! தீர்க்கதரிசி பாபா வெங்கா கணிப்பு!

2025 சனி பெயர்ச்சி! ஏழரை சனியின் பார்வையில் விழும் 3 ராசிகள் இதுதான்..! எந்த ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும்? | 2025 Sani Peyarchi

2025 New Year Horoscope: 12 ராசிக்காரர்களுக்கும் உகந்த தெய்வங்கள் யார்? எப்போது வழிபட வேண்டும்?

Show comments