Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிளன்மார்க் கம்பெனியின் மருந்து கொரோனா தொற்றிலிருந்து குணமடைய உதவுமா?

Webdunia
திங்கள், 22 ஜூன் 2020 (15:36 IST)
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோன நோயாளிகள் அதிகரித்து வருகின்றனர். உலக நாடுகளில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸிற்கான மருந்தை கண்டுபிடிக்க உலகம் முழுவதும் பல முயற்சிகள் நடைபெற்று வருகின்றன அதுவரையில் நோயாளிகளுக்கு ஆன்டி வைரல் மருந்துகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் அரசாங்கம் கிளன்மார்க் என்னும் நிறுவனத்திற்கு கொரோனா சிசிக்கைக்கான மருந்து தயாரிக்க அனுமதி வழங்கியுள்ளது.

கிளன்மார்க் மருந்து தயாரிப்பு நிறுவனம், கொரோனா வைரஸ் தொற்றி லேசான அறிகுறிகள் உள்ள நபர்களுக்கான மருந்தை தயாரிக்கும். இந்த ஆன்டி வைரல் மருந்தை தயாரிப்பதற்கான அனுமதியை சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் செயல்படும் டிரக் கண்ட்ரோலர் ஜெனரல் ஆஃப் இந்தியா வழங்கியுள்ளது.

கிளன்மார்க் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் இந்த மருந்து ஆன்டி வைரல் மருந்தாக செயல்படும்.

இதுகுறித்து கிளன்மார்க் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், "இது ஒரு ஆன்டிவைரல் மருந்தாக இருக்கும். இது ஃபாவிபிராவிர் என்னும் பெயரில் விற்பனைக்கு வரும்" என தெரிவித்துள்ளது.

இந்த மருந்து மருந்துக்கடைகளில் கிடைக்கும் என்றும் ஆனால் மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் இதனை வாங்க முடியாது எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த மாத்திரையின் விலை ரூபாய் 103. இந்த மருத்து கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகள் உள்ள நோயாளிகளுக்காகத் தயாரிக்கப்படுகிறது.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்திடமிருந்து இம்மாதிரியாக கொரோனா சிகிச்சைக்கான மருந்து தயாரிக்கும் அனுமதியை பெற்ற முதல் நிறுவனம் கிளன்மார்க் ஆகும். இந்த மருந்து லேசான அல்லது நடுத்தர அளவில் கொரோனா தொற்று அறிகுறிகள் உள்ள நோயாளிகளுக்கு வழங்கப்படும்.

கடந்த சில மாதங்களாக கொரோனாவிற்கான சிகிச்சையில் பல மருந்துகளின் பெயர்கள் அடிபடுகின்றன. இம்மாதிரியான மருந்துகளால் நூற்றுக்கணக்கான நோயாளிகள் குணமடைந்தனர்.

அதில் ரெம்டிசிவிர் என்ற மருந்தும் ஒன்று. தற்போது மகாராஷ்டிர அரசாங்கம் 10,000 டோஸ் ரெம்டிசிவிர் மருந்து வாங்க ஆணை வழங்கியுள்ளது. அதேபோல தொண்டை வலி இருந்தால் அசித்ரோமைசின், காய்ச்சல் இருந்தால் நோயாளிகளின் உடல் எடையை பொறுத்து பாராசிடமல் மற்றும் ஹைட்ராக்ஸிக்லோரோக்வின் ஆகியவையும் வழங்கப்படுகிறது. மேலும் மோசமாக பாதிக்கப்பட்டிருந்தால் டொசிலிசுமாப் என்னும் மருந்து வழங்கப்படும்.

ஆனால் இந்த ஃபவிபிராஃவிர் மருந்து விலை குறைவான மருந்தாக கருதப்படுகிறது. ரெம்டிசிவிர் ஊசி ஒன்றின் விலை 10 முதல் 11 ஆயிரம் ரூபாய். இந்த ஃபவிபிராவிரின் விலை 103 ரூபாய். இந்த மாத்திரை சந்தைக்கு வந்தபின் அதன் விலை அதிகரிக்கலாம் ஆனால் பொதுமக்கள் வாங்கும்படியான விலையில்தான் இருக்கும். இந்திய மருத்துவக் கூட்டமைப்பின் மகராஷ்டிர மாநில தலைவர் அவிநாஷ் போண்ட்வே பிபிசி மராத்தி சேவையிடம் பேசுகையில், " இந்த மருந்து ஆன்டி வைரல் மருந்தாக செயல்படும் ஆனால் எந்த ஒரு மருந்தும் உணவு மற்றும் மருத்து நிர்வாகத்தின் அனுமதியை பெறவேண்டும்" என்றார்.

"எந்த ஒரு ஆண்டி வைரல் மருந்தும் இருவழியாக செயல்படும் ஒன்று, உடலில் உள்ள வைரஸை முற்றிலுமாக அழிக்கும் அல்லது உடலில் உள்ள வைரஸின் எண்ணிக்கையை குறைக்கும். தற்போதுவரை இந்த மருந்து எந்த வகையில் செயல்படும்," என தெரியவில்லை என்று மேலும் தெரிவித்தார் அவினாஷ்.

ஆன்டி வைரல் மருந்துகள் உங்கள் உடலில் வேகமாக வளரும் வைரஸ்களை கட்டுப்படுத்தும். எனவே நோயாளிகள் சீக்கிரம் குணமடைவார்கள். கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் மருந்திற்கு அதிக தேவையுள்ளது.

இந்த மருந்து குறித்து பல எதிர்பார்ப்புகள் இருந்தாலும், இதுகுறித்து சில கேள்விகளும் எழுப்பப்பட்டுள்ளன. டாடா மெமோரியலின் இயக்குநர் ப்ரமேஷ், இந்த மருந்துக்கு எதன் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டது என்ற தரவுகள் உள்ளதா என்று கேட்டுள்ளார்.

மேலும், "தற்போதைய நெருக்கடியான சூழலில் இந்த மருந்தை வாங்க நோயாளிகளும் மருத்துவர்கள் ஆர்வம் காட்டுவர், ஆனால் இந்த மருந்தின் செயல்பாட்டை விளக்கும் ஏதேனும் எடுத்துக்காட்டுகள் உள்ளனவா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசத்தில் இந்துமத தலைவர் கைது.. நாட்டை விட்டு வெளியேற தடை..!

கனமழை எதிரொலி: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு..!

அடுத்த 3 மணி நேரத்துக்கு 32 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

மதுக்கடையை அகற்ற கூடாது: உண்ணாவிரதம் போராட்டம் செய்யும் மதுப்பிரியர்கள்..!

கரையை கடக்காமல் கடற்கரை ஓரமாக புயல் நகரும்: பாலசந்திரன்

அடுத்த கட்டுரையில்
Show comments