Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேரலைசுனாமி தாக்கிய டோங்காவில் என்ன நிலைமை?

Webdunia
செவ்வாய், 18 ஜனவரி 2022 (09:36 IST)
மோதி உரையின்போது டெலிபிராம்டர் கோளாறு?
 
உலகப் பொருளாதார மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோதி திங்கட்கிழமை மாலை உரையாற்றியபோது திடீரென்று தன் பேச்சுக்கு இடையே இடர்பாட்டை சந்தித்ததாக சமூக வலைதளங்களில் செய்தி பகிரப்பட்டு வருகிறது.
 
பிரதமர் மோதி தனது பக்கவாட்டாகப் பார்த்து கேள்வி எழுப்புவதையும், பின்னர் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதற்கான காரணம், அவரின் டெலிப்ராம்ப்டர்ரில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் இது நடந்திருக்கும் என்று கருதப்படுகிறது.
 
சுனாமி தாக்கிய டோங்காவில் என்ன நிலைமை?
 
 
எரிமலை வெடிப்பு மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்ட பசிபிக் தீவான டோங்காவில் வசிக்கும் மக்களுக்கு என்னவாயிற்று என்பது இரண்டு நாள்களாகியும் வெளியுலகத்துக்குத் தெரியவில்லை.
 
தொலைத் தொடர்பு முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டிருப்பதால், நிலைமையை ஆராய விமானங்கள் அனுப்பப்பட்டிருக்கின்றன.
 
கடலுக்கு அடியில் இருக்கும் எரிமலை வெடித்ததால் தீவு முழுவதும் சாம்பல் மூடியிருப்பதாகவும், ஒரு மீட்டர் உயரத்துக்கும் அதிகமான சுனாமி அலைகளால் கடலோரப் பகுதிகள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் மதிப்பிடப்படுகிறது.
 
எரிமலை வெடித்த சத்தம் பல ஆயிரம் கிலோ மீட்டருக்கும் அப்பால் இருக்கும் நியூசிலாந்து வரைக்கும் கேட்டிருக்கிறது.
 
10 ஆயிரம் கிலோ மீட்டருக்கு அப்பால் இருக்கும் பெரு நாடு வரைக்கும் சுனாமி அலைகள் சென்றிருக்கின்றன.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 ஆயிரம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம்: மத்திய அரசு அதிரடி நடவடிக்கை..!

அதானி நிறுவனத்திற்கும் தமிழக மின்வாரியத்திற்கும் தொடர்பு இல்லை: அமைச்சர் செந்தில் பாலாஜி

இன்றிரவு 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கஸ்தூரியை பிடிக்க முடிந்த போலீசால் செந்தில் பாலாஜி தம்பியை பிடிக்க முடியலையா? செல்லூர் ராஜு

முதல்முறையாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை.. ரஷ்யா - உக்ரைன் போர் தீவிரமடைகிறதா?

அடுத்த கட்டுரையில்
Show comments