உடலுறவு கொள்ள ஐ.நா காரை பயன்படுத்திய ஊழியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இஸ்ரேலில் ஐநாவின் அலுவலகப் பணிகளுக்காக இயங்கிவரும் காரில் பெண் ஒருவருடன் ஐநா ஊழியர் ஒருவர் உடலுறவு கொண்ட விவகாரம் தொடர்பாக, அப்போது அந்த காரில் இருந்த இரண்டு ஊழியர்களை ஊதியம் இல்லாத கட்டாய விடுப்பில் ஐ.நா அனுப்பியுள்ளது.
இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவில் பதிவு செய்யப்பட்ட இந்த நிகழ்வின் காணொளி கடந்த மாதம் சமூக ஊடகங்களில் வைரலானது. 'UN' என எழுதப்பட்ட அந்த வாகனத்தில் இருந்த ஊழியர்கள் இருவரும் யு.என்.டி.எஸ்.ஓ. எனப்படும் ஐ.நா படைகள் கண்காணிப்பு அமைப்பின் ஊழியர்கள் என்பது தெரியவந்துள்ளது.
இந்த நிகழ்வு தொடர்பான விசாரணை முடியும் வரை அவர்கள் பணிக்கு வர மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு மட்டும் ஐ.நா ஊழியர்களுக்கு எதிராக 175 பாலியல் புகார்கள் இருப்பதாக அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.