Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யுக்ரேன் Vs ரஷ்யா பதற்றம்: சமீபத்திய முன்னேற்றங்கள் என்ன?

Webdunia
புதன், 23 பிப்ரவரி 2022 (00:33 IST)
ஹங்கேரி எல்லை பகுதியில் கண்காணிப்பில் ராணுவ வீரர் (கோப்புப்படம்)Image caption: ஹங்கேரி எல்லை பகுதியில் கண்காணிப்பில் ராணுவ வீரர் (கோப்புப்படம்)
 
யுக்ரேனின் கிழக்குப் பகுதியில் உள்ள இரண்டு பிரிவினைவாத பகுதிகளை அங்கீகரிக்கும் ரஷ்யாவின் முடிவால், அந்த இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் போர் பதற்றம் தீவிரமாகியிருக்கிறது.
 
உலக நாடுகளின் தலையீட்டால் இந்த பதற்றம் கடந்த வாரம் தணிந்தது போலத் தோன்றியது. ஆனாலும், அமெரிக்காவும் பிரிட்டனும் யுக்ரேன் எல்லையில் ரஷ்யா ஏற்கெனவே அத்துமீறிய ஆக்கிரமிப்பை தொடங்கி விட்டதாக குற்றம்சாட்டி வந்தன.
 
யுக்ரேனிய பிரிவினைவாத சக்திகள் ஆதிக்கம் உள்ள இரு பகுதிகளில் ரஷ்யா தமது படையினரை குவித்து வருவதாக செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வந்தன.
 
இந்த நிலையில், வெளிநாட்டு மண்ணில் ரஷ்ய படைகள் இருப்பது அத்துமீறிய படையெடுப்பின் தொடக்கம் என்று அமெரிக்காவும் பிரிட்டனும் மீண்டும் எச்சரித்துள்ளன.
 
அமெரிக்காவின் கூற்றுை எதிரொலிக்கும் நேட்டோ அமைப்பும், ரஷ்யா யுக்ரேன் மீது முழு அளவிலான தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளது என்பதற்கான அனைத்து அறிகுறிகளும் இருப்பதாக கூறியிருக்கிறது.
 
இந்த விவகாரத்தில் ரஷ்யாவிற்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதிக்க ஐரோப்பாவின் சில நாடுகள் மற்றும் அமெரிக்கா ஆயத்தமாகி வருகின்றன.
 
ரஷ்யாவில் இருந்து செயல்படுத்தப்படும் நார்ட் ஸ்ட்ரீம் 2 என்ற மிகப்பெரிய எரிவாயு குழாய் திட்டத்தை நிறுத்துமாறு யுக்ரேன் அதிபர் வொலோடிமீர் ஸெலென்ஸ்கியோன் கோரியுள்ளார். ஆனால், அந்த திட்டத்தை ஏற்கெனவே தமது அரசு நிறுத்தி வைத்துள்ளதாக ஜெர்மன் ஆட்சித்துறைத் தலைவர் ஓலாஃப் ஷோல்ஸ் அறிவித்துள்ளார்.
 
இதற்கிடையே, யுக்ரேனில் உள்ள தமது தூதரக அதிகாரிகளை வெளியேற்ற ரஷ்யா நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரஷ்ய படைத்தலைவர் குண்டு வைத்து கொலை! உக்ரைன் காரணமா? - ரஷ்யாவில் பரபரப்பு!

நீதிபதி கேட்ட கேள்விக்கு பதில்.. மருத்துவரை கத்தியால் குத்திய இளைஞருக்கு ஜாமீன்..!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு: தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி..!

சவுக்கு சங்கர் மீண்டும் கைது.. பிடிவாரண்ட் பிறப்பித்ததால் உடனடி நடவடிக்கை..!

இன்று 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments