Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யுக்ரேன் Vs ரஷ்யா: டொனியட்ஸ்க் ஏவுகணை தாக்குதலில் 20 பேர் பலி: ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம்

Webdunia
செவ்வாய், 15 மார்ச் 2022 (00:22 IST)
இன்று காலையில் யுக்ரேனின் டொனியட்ஸ்க் பிரதேசத்தில் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
இந்த தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டதாகவும், 9 பேர் காயமடைந்துள்ளதாகவும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் இந்த கூற்றை பிபிசியால் சுயாதீனமாக சரிபார்க்க முடியவில்லை.
 
இந்த தாக்குதல் வருத்தத்திற்குரியது எனவும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ள ரஷ்ய அதிபர் மாளிகை, “கடல் கடந்த யுக்ரேனின் முதலாளிகள் யுக்ரேனிய ராணுவத்திற்கு கட்டளையிடுகிறார்கள் என்று தோன்றுகிறது” என தெரிவித்துள்ளதாக, ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.
 
இதனிடையே, இத்தாக்குதல் குறித்த குற்றச்சாட்டை யுக்ரேன் மறுத்துள்ளது.
 
கிழக்கு யுக்ரேனில் அமைந்துள்ள டொனியட்ஸ்க் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியாகும். இப்பகுதியில் கடந்த 2014ல் இருந்து யுக்ரேனிய படைகளுக்கு எதிராக சண்டை நடைபெற்று வருகிறது. இந்த பகுதியை தன்னாட்சி மிக்க பகுதியாக அங்கீகரிப்பது, யுக்ரேனுக்கு எதிரான போரை நிறுத்துவதற்கான ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் கோரிக்கைகளுள் ஒன்றாகும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments