Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐக்கிய நாடுகள் சபையில் பேச அனுமதி கேட்டிருக்கும் தாலிபன்

Webdunia
புதன், 22 செப்டம்பர் 2021 (10:29 IST)
ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தில் இருக்கும் தாலிபன்கள், ஐநா சபையில் பேச, ஐநாவிடமே முறையாக அனுமதி கேட்டு கடந்த திங்கட்கிழமை கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார்கள். 
 

நியூயார்க் நகரத்தில் உலக நாடுகளின் தலைவர்கள் முன்னிலையில் பேச தாலிபன் அனுமதி கோரியுள்ளது. இது தொடர்பாக தாலிபன் குழுவின் வெளிவிவகாரத் துறை அமைச்சர் ஐக்கிய நாடுகள் சபைக்கு எழுதியுள்ள கடிதத்தை, ஐநாவின் கமிட்டி ஒன்று பரிசீலனை செய்து அனுமதிப்பது குறித்து தீர்மானிப்பார்கள்.
 
அக்கமிட்டியில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா உட்பட ஒன்பது உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என ஐநா சபையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார். ஆனால் இக்குழு, அடுத்த திங்கட்கிழமை (செப்டம்பர் 27) ஐநா சபை கூட்டங்கள் நிறைவடையும் வரை சந்திப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு.
 
எனவே அதுவரை ஐக்கிய நாடுகள் சபையின் விதிமுறைகள் படி குலாம் இசக்சாயே ஆப்கானிஸ்தானுக்கான ஐநாவின் தூதராக தொடர்வார். குலாம் இசக்சாய் செப்டம்பர் 27ஆம் தேதி ஐநாவில் ஒரு உரையாற்றலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தாலிபன்களோ, அவரின் நோக்கம் ஆப்கானிஸ்தானை பிரதிபலிக்காது என கூறியுள்ளனர்.

மேலும், தாலிபன் சுஹைல் ஷாஹீனை ஆப்கானிஸ்தானுக்கான ஐநா தூதராகவும் பரிந்துரைத்துள்ளது. முன்னாள் ஆப்கானிஸ்தான் அரசின் பிரதிநிதி, ஆப்கனின் உண்மையான பிரதிநிதி அல்ல எனவும் தாலிபன்கள் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு ஊழியர்கள் அரை மணி நேரம் தாமதமாக வரலாம்: அரசே கொடுத்த அனுமதி..!

திரும்ப பெறப்பட்ட டிஎஸ்பி வாகனம்.. நடந்தே அலுவலகம் வந்த வீடியோ வைரல்..!

நீட் தேர்வில் தோல்வி.. பொறியியல் படித்த மாணவி.. இன்று ரூ.72 லட்சத்தில் வேலை..!

தவெக கொடி விவகார வழக்கு: விஜய் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

பரோலில் வந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கைதி மீது துப்பாக்கி சூடு.. அதிர்ச்சி தரும் சிசிடிவி காட்சிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments