Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

47 ஆயிரம் பன்றிகளின் ரத்தத்தால் சிவப்பான தென் கொரிய ஆறு

Advertiesment
South Korean
, புதன், 13 நவம்பர் 2019 (12:44 IST)
கொன்று புதைத்த 47 ஆயிரம் பன்றிகளின் ரத்தத்தால், வட மற்றும் தென் கொரிய எல்லைக்கு அருகில் ஓடுகின்ற ஆறு ஒன்று சிவப்பாக மாறியுள்ளது.
ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் பரவுவதை தடுக்கும் முயற்சியாக 47 ஆயிரம் பன்றிகளை தென் கொரிய அதிகாரிகள் தேர்ந்தெடுத்து கொன்றனர்.
 
எல்லைப் பகுதியில் கொல்லப்பட்ட பன்றிகள் புகைக்கப்பட்ட இடத்தில் பெய்த பலத்த மழை காரணமாக இம்ஜின் ஆற்றின் ஒரு கிளை நதியில் இந்த பன்றிகளின் ரத்தம் கலந்துவிட்டது.
 
ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் விலங்குகளிடம் வேகமாக பரவக்கூடிய, குணப்படுத்த முடியாத நோயாகும். இந்த நோய் தாக்கிய பன்றிகளில் எதுவும் உயிர் தப்புவதில்லை. ஆனால், இந்த நோய் மனிதருக்கு ஆபத்தானதில்லை.
 
ஆற்றில் கலந்துள்ள ரத்தம் பிற விலங்குகளுக்கு நோய் தொற்று ஏற்பட காரணமாக அமையும் என்று கவலைகள் எழுந்துள்ள நிலையில், இந்தப் பன்றிகள் நோய் தொற்று நீக்கப்பட்ட பின்னர்தான் கொல்லப்பட்டன இன்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

webdunia

 
மேலும் நதியில் ரத்தம் கலக்காமல் இருக்க அவசர கால நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மறுவாக்கு எண்ணிக்கை முடிவு தடை நீட்டிப்பு..