Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிறந்த குழந்தையை கடத்தி 18 ஆண்டுகள் வளர்த்த பெண் மீதான விசாரணை துவங்கியது

Advertiesment
Girl
, திங்கள், 22 பிப்ரவரி 2016 (19:31 IST)
சுமார் இருபதாண்டுகளுக்கு முன்னர் புதிதாக பிறந்த குழந்தையை கடத்திச் சென்று தன் சொந்தக்குழந்தை போல் வளர்த்த ஒரு பெண் மீதான வழக்கின் நீதிமன்ற விசாரணை துவங்கவிருக்கிறது.


 

 
1997 ஆம் ஆண்டு கேப் டவுனில் பிரசவ வார்டில் தாயின் படுக்கையை ஒட்டியிருந்த தொட்டிலில் கிடந்த பிற்ந்து மூன்றே நாளான பச்சிளம் குழந்தையை இந்த பெண்மணி யாருக்கும் தெரியாமல் கடத்திச் சென்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
 
செபனி நர்ஸ் என்று தற்போது அறியப்படும் அந்த குழந்தையை இந்த பெண்மணி தன் சொந்த மகள் போல வளர்த்து வந்தார்.
 
ஆனால் செபானி நர்ஸ் படித்த பள்ளியில் படித்த வேறொரு பெண் குழந்தையும் இவரும் ஒரே ஜாடையில் இருப்பதைத் தொடர்ந்து இந்த இரு நிறுமியருக்கும் இடையில் நட்பு ஏற்பட்டு, அதன் தொடர்ச்சியாக நிகழ்ந்த விசாரணைகளின் முடிவில் செபானி நர்ஸ் பிறந்ததும் கடத்தப்பட்ட குழந்தை என்கிற விஷயம் வெளிப்பட்டது.
 
அதைத் தொடர்ந்து நடந்த மரபணு பரிசோதனைகளில் இந்த இருவரும் ஒரே தாய்க்குப் பிறந்த சகோதரிகள் என்பதும், செபானி நர்ஸை குழந்தையாக இருந்தபோது கடத்திய பெண்மணியே அவரை தன் மகள் போல வளர்க்கிறார் என்பதும் தெரியவந்தது.
 
செபானி நர்ஸை கடத்தி வளர்த்த பெண் கைது செய்யப்பட்டார்.
 
தற்போது செபானி நர்ஸ் தனது சொந்த தாயோடும் குடும்பத்தோடும் இணைந்து வாழ்கிறார்.
செபானி நர்ஸைக் கடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் பெண்மீதான வழக்கின் விசாரணை ஆரம்பித்திருக்கிறது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil