Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காஷ்மீரில் பனிச்சரிவு : 10 இந்திய வீரர்களைக் காணவில்லை

Advertiesment
Snow fall
, புதன், 3 பிப்ரவரி 2016 (20:25 IST)
காஷ்மீரில் உள்ள சியாச்சின் பனிச்சிகரத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கிய பத்து இந்திய வீரர்களைக் காணவில்லை என இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது.


 

 
ராணுவமும் விமானப் படையின் தேடுதல் அணிகளும் மோப்ப நாய்களின் உதவியுடன் காணாமல் போனவர்களைத் தேடிவருவதாக, ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் கர்னல் எஸ்டி கோஸ்வாமி தெரிவித்திருக்கிறார்.
 
புதன்கிழமையன்று அதிகாலையில், சியாச்சினின் வடபகுதியில் இந்தப் பனிச்சரிவு ஏற்பட்ட அங்கிருந்த ராணுவ காவல்தளத்தை மூடியது.
 
உலகின் மிக உயரமான போர்க்களம் என்று வர்ணிக்கப்படும் சியாச்சினில் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளின் படையினரும் தொடர்ந்து காவல் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
 
கடந்த மாதம் இதே பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் நான்கு இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil