ஆப்ரிக்காவின் பெரிய தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான எம்.டி.என் நிறுவனம் தாலிபன் மற்றும் அல் கொய்தாவுக்கு லஞ்சம் கொடுத்ததாகப் புகார் எழுந்துள்ளது.
இது குறித்த சட்டப்பூர்வமான புகார் அமெரிக்க நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. ஆஃப்கனில் கொல்லப்பட்ட அமெரிக்க குடும்பங்களின் சார்பாக இந்த புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
தங்களது செல்போன் டவர்களுக்கான பாதுகாப்பு செலவை குறைப்பதற்காக அந்த நிறுவனம் தாலிபன் மற்றும் அல் கொயத்வாவுக்கு லஞ்சம் வழங்கியதாக அந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எம்.டி.என் ஆப்ரிக்காவின் மிகப்பெரிய தொலைபேசி சேவை நிறுவனமாகும். 240 மில்லியன் சந்தாதாரர்களுடன் சர்வதேச அளவில் இந்த நிறுவனம் எட்டாவது பெரிய நிறுவனமாக உள்ளது. தங்கள் நிறுவனம் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து ஆய்வு செய்து வருவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.