இலங்கை நாடாளுமன்றத்துக்கான தேர்தல் பெரும்பாலும் அமைதியாக நடைபெற்று முடிந்துள்ளதாக தேர்தல் செயலகம் அறிவித்துள்ளது. வாக்குப் பெட்டிகள் பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்பட்டன
ஆங்காங்காகே சிற்சில தேர்தல் விதிமுறை மீறல்கள் இடம்பெற்றுள்ளன, இது தொடர்பில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர் என அங்கிருக்கும் பிபிசியின் செய்தியாளர்கள் கூறுகிறார்கள். வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில், வாக்குப் பெட்டிகள் உரிய பாதுகாப்புடன் வாக்குகள் எண்ணப்படும் நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன.
முதலில் அஞ்சல் வாக்குகள் எண்ணப்படவுள்ளன. பின்னர் ஏனைய வாக்குகள் எண்ணப்படும்.அஞ்சல் வாக்குகள் குறித்த முதலாவது முடிவு நள்ளிரவு சமயத்தில் எதிர்பார்க்கலாம் என மேலதிகத் தேர்தல் ஆணையாளர் எமது செய்தியாளரிடம் தெரிவித்தார்.