Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இலங்கைத் தேர்தல்: பத்து முக்கிய புள்ளிவிவரங்கள்

இலங்கைத் தேர்தல்: பத்து முக்கிய புள்ளிவிவரங்கள்
, வெள்ளி, 14 ஆகஸ்ட் 2015 (20:36 IST)
இலங்கைத் தேர்தலில் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய அடிப்படை புள்ளிவிவரங்கள் பத்து.
 
இலங்கை நாடாளுமன்றத்தின் வெளிப்புறத்தோற்றம்
 
  • இலங்கையின் மொத்தத் தேர்தல் மாவட்டங்கள்: 22
  •  
  • இலங்கையின் தேர்தல் மாவட்டங்களில் கொழும்பில் அதிகபட்சமாக 19 தொகுதிகளும் குறைந்தபட்சமாக திரிகோணமலையில் 4 தொகுதிகளும் இடம்பெற்றிருக்கின்றன.
  •  
  • நாடு முழுவதும் முழுவதும் அமைக்கப்படும் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை: 12,314
  •  
  • இலங்கையில் பதிவு செய்திருக்கும் ஒட்டுமொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை: 1,50,44,490
  •  
  • இலங்கையில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை: 64
     
webdunia
இலங்கை நாடாளுமன்றத்தின் உட்புறத்தோற்றம்
  • தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை: 3653
  •  
  • சுயேச்சைக் குழுக்களிலிருந்து போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை: 2498
  •  
  • இந்தத் தேர்தலில் போட்டியிடும் ஒட்டுமொத்த வேட்பாளர்களின் எண்ணிக்கை: 6151. இதில் அதிகபட்சமாக கொழும்பில் 792 வேட்பாளர்களும், குறைந்தபட்சமாக பொலநறுவையில் 88 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.
  •  
  • தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருப்பவர்களில் 202 பேர் இந்தத் தேர்தலிலும் போட்டியிடுகிறார்கள்.
  •  
  • இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 225. யாருடைய ஆதரவும் இன்றி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க ஒரு அரசியல் கட்சி அல்லது கூட்டணிக்குத் தேவைப்படும் குறைந்தபட்ச நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 113.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil