Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவம் - 8 பேர் பலி

Webdunia
வியாழன், 27 மே 2021 (11:09 IST)
அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் பயணிகள் ரயில் நிலையம் ஒன்றில் துப்பாக்கிதாரி ஒருவர் எட்டுபேரை சுட்டுக் கொன்றுள்ளார்.

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் பயணிகள் ரயில் நிலைய பணிமனை ஒன்றில் துப்பாக்கிதாரி ஒருவர் எட்டுபேரை சுட்டுக் கொன்றுள்ளார். உள்ளூர் நேரப்படி காலை 6.45 மணிக்கு இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
 
இந்த சம்பவம், சான் ஜோன்ஸில் உள்ள சாண்டா க்ளாரா வேலி போக்குவரத்து மையத்தில் நடைபெற்றுள்ளது. துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டவரின் பெயர் சாமூவேல் காசிடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அவருக்கு வயது 57 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் அந்த பணிமனையின் ஊழியர். ஊழியர்கள் கூட்டத்தில்தான் இந்த துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது.
 
இந்த தாக்குதலுக்கு முன் சந்தேக நபர் தனது வீட்டை தீயிட்டு கொளுத்தியுள்ளார் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த வருடத்தில் அமெரிக்கா முழுவதும் இதுவரை 230 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவுக்கு 25% வரி விதிப்பேன்: மீண்டும் மிரட்டிய டிரம்ப்..!

2011க்கு பிறகு அதிபயங்கர நிலநடுக்கம்! பல நாடுகளை நோக்கி வரும் சுனாமி அலைகள்! - அதிர்ச்சி வீடியோ!

சென்னை மெட்ரோவில் 20 சதவீத பயண கட்டண சலுகை.. இந்த ஒன்றை மட்டும் செய்தால் போதும்..!

அதிக வாக்காளர்கள் நீக்கப்பட்டால் நாங்கள் தலையிடுவோம்: சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள்..!

ஓபிஎஸ் இன்று அவசர ஆலோசனை.. பாஜக கூட்டணியில் இருந்து விலக முடிவா?

அடுத்த கட்டுரையில்
Show comments