Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆயிரம் வருடம் வாழும் மரம் - ரகசியத்தை கண்டறிந்த விஞ்ஞானிகள்

ஆயிரம் வருடம் வாழும் மரம் - ரகசியத்தை கண்டறிந்த விஞ்ஞானிகள்
, வியாழன், 16 ஜனவரி 2020 (12:10 IST)
கிங்க்கோ மரங்கள் எப்படி 1000 வருடங்களுக்கும் மேலாக உயிரோடு உள்ளன என்னும் ரகசியத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
 
அந்த மரங்கள் நோய்கள் மற்றும் வறட்சியிலிருந்து தங்களைக் காத்து கொள்ள ஒரு விதமான ரசாயனங்களை உற்பத்தி செய்து கொள்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
 
இந்த கிங்க்கோ மரங்கள் பூங்காக்கள் மற்றும் தோட்டங்களில் வளர்க்கப்படுகின்றன ஆனால் இந்த வகை மரங்கள் காடுகளில் அழிந்து வருகின்றன.
 
"இந்த மரங்கள் அதிக நாட்கள் வாழ்வதற்கான ரகசியம் என்னவென்றால், ஆரோக்கியமான நோய் எதிர்ப்பு அமைப்பு மற்றும் வயதாகும் மரபு இல்லாததது" என வடக்கு டெக்ஸஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ரிச்சர்ச் டிக்ஸன் கூறுகிறார்.
webdunia
"இந்த கிங்க்கோ மரங்கள் வயதானாலும் தங்களை எந்த தீங்கும் பாதிக்காமல் பார்த்துக் கொள்கின்றன." என்கிறார் ரிச்சர்ட்.
 
இந்த மரங்களின் அம்சம்
மெதுவாக வளர்ந்தாலும் பெரிதாக வளரக்கூடியது.
இலையுதிர் காலத்தில் கண்ணைக் கவரும் மஞ்சள் நிற இலைகள்
இந்த மரங்கள் சீனாவை பூர்விகமாக கொண்டது
பழமைவாய்ந்த மரங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இதன் படிமங்கள் டைனசர் காலத்திலிருந்து காணப்படுகிறது.
இந்த மரம் குறித்து அமெரிக்க மற்றும் சீனாவின் விஞ்ஞானிகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.
 
15 வயது முதல் 667 வயது வரை உள்ள இந்த மரங்களின் பட்டைகள், அணுக்கள், இலைகள் மற்றும் விதைகளை ஆராய்ந்தனர்.
 
படத்தின் காப்புரிமைGETTY IMAGES
அந்த ஆய்வில், பூச்சிகள் மற்றும் வறட்சியால் ஏற்படக்கூடிய மன அழுத்தத்திலிருந்து தன்னை காத்துக் கொள்ள இந்த மரம் ஒரு விதமான ரசாயனத்தை உற்பத்தி செய்கிறது என தெரியவந்தது.
 
அதேபோன்று புற்கள் மற்றும் பிற தாவரங்கள் போல குறிப்பிட்ட ஒரு காலம் வந்ததும் வயதாகும் தன்மையும் இந்த தாவரங்களுக்கு வருவதில்லை.
 
பொதுவாக இத்தனை ஆண்டுகள் வாழ்ந்த மரங்கள் பனி மற்றும் மின்னல்களால் தாக்கப்பட்டிருக்கக்கூடும் ஆனால் இந்த மரத்தில் ஆரோக்கியமான வளர்ச்சி காணப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
 
இந்த கிங்க்கோ மரங்களின் போன்றே நீண்ட நாட்களுக்கு வாழும் பிற மரங்களும் இதே சிறப்புகளை பெற்றிருக்கலாம் என ரிச்சர்ட் கூறுகிறார்.
 
எங்களின் இந்த ஆராய்ச்சி பின்வரும் காலங்களில், நீண்டகாலம் வாழும் மரங்களின் ஆயுள் ரகசியம் குறித்து மேலும் பல தகவல்களை அளிக்கக்கூடிய ஆராய்ச்சிக்கு வித்திடும் என தெரிவிக்கிறார் ரச்சர்ட்.
 
இம்மாதிரி நீண்டகாலம் வாழ்வது, உணவு, வெளிச்சம் மற்றும் நீர் நிலையாக கிடைப்பதால் மட்டும் சாத்தியமில்லை; மெதுவான வளர்ச்சி விகிதம், அணுக்களின் அமைப்பு மற்றும் பூச்சி, வறட்சி, நோய்கள், பருவநிலை பாதிப்பு, இயற்கை சீற்றங்கள் ஆகியவற்றை தாங்கும் வலிமை இது எல்லாவற்றுடன் தொடர்புடையது என்றும் கூறுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோலாட்டம், ஒயிலாட்டம், கொண்டாட்டம் – ஸ்டாலினின் சமத்துவ பொங்கல்!