Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

செளதி அரேபியா, அமீரகம், கத்தார், குவைத்: கொத்து கொத்தாக வேலையிழக்கும் தென் இந்தியர்கள் - என்ன நடக்கிறது அங்கே?

செளதி அரேபியா, அமீரகம், கத்தார், குவைத்: கொத்து கொத்தாக வேலையிழக்கும் தென் இந்தியர்கள் - என்ன நடக்கிறது அங்கே?
, புதன், 15 ஜூலை 2020 (23:22 IST)
வளைகுடா நாடுகளுக்கும், தென்னிந்திய மாநிலங்களுக்கும் இடையே சுமார் 500 ஆண்டுகளாக நட்புறவு இருந்து வருகிறது.
 
மசாலா பொருட்களை வாங்கிச் செல்வதற்காகக் கேரள துறைமுகங்களுக்கு அரபு நாட்டு வர்த்தகர்கள் வந்து செல்லத் தொடங்கிய காலம் முதல், இருநாடுகளுக்கும் இடையிலான இந்த நட்பு தொடர்ந்து இருந்து வருகிறது.
 
1970-களில் அரபு தேசங்களில் எண்ணெய் வளம் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அந்த நாடுகளில் அலுவலகங்கள், கச்சா எண்ணெய் கிணறுகள் மற்றும் கட்டுமான பணிகள் ஆகியவற்றுக்குப் பெருமளவு ஆட்கள் தேவைப்பட்டனர்.
 
இதனைத் தொடர்ந்து தென்னிந்திய மாநிலங்களிலிருந்து, குறிப்பாகக் கேரளாவில் இருந்து பெருமளவு தொழிலாளர்கள் அரபு தேசங்களுக்கு வேலைக்காக சென்றனர்.
 
வளைகுடா நாடுகளில் தற்போது சுமார் 85 லட்சம் இந்தியர்கள் வாழ்ந்து வருகின்றனர். உலகிலேயே மிகப்பெரிய புலம்பெயர் மக்கள் தொகை இதுவாகும். குறிப்பாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ்,செளதி அரேபியா, குவைத் மற்றும் கத்தார் ஆகிய நான்கு நாடுகளில் பணியாற்றும் இந்தியர்கள் மூலம் இந்தியாவுக்குப் பெருமளவு பணம் வருகிறது. இது வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வரும் நிதிமூலத்தில் ஐந்தாவது பெரிய அளவாகும்.
 
உலக வங்கியின் கணக்கீட்டின்படி, இந்த ஆண்டு அரபு நாடுகளிலிருந்து தெற்காசிய நாடுகளுக்கு வரும் பணத்தில் குறைந்தபட்சம் 22 சதவீத அளவுக்கு சரிவு ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது.
வளைகுடா நாடுகளில் உள்ள தென்னிந்திய மாநிலத்தவர் குறித்த தனிப்பட்ட தரவுகள் இல்லையென்றாலும், வர்த்தக செய்தி மற்றும் ஆராய்ச்சி முகமையான ப்ளூம்பெர்க், இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் அமீரகத்திலிருந்து இந்தியாவுக்கு வரும் பணத்தில் 35சதவீதம் அளவுக்கு சரிவு ஏற்படும் என கணித்துள்ளது. அரபு நாடுகளிலேயே அமீரகத்திலிருந்துதான் இந்தியாவுக்குக்கு அதிக பணம் வருகிறது.
 
தற்போதைய சூழலில் வளைகுடா நாடுகளில் பணியாற்றுபவர்கள்,தங்கள் வேலைக்கு உத்தரவாதம் இல்லை என்பதைப் போல உணர்ந்து வருவதாக வளைகுடா நாடுகளில் 7 மருத்துவமனைகளை நடத்தி வரும் விபிஎஸ் ஹெல்த்கேர் நிறுவனத்தின் மூத்த அதிகாரியான ரஞ்சீவ் மங்கோட்டில் கூறுகிறார்.
இது குறித்து விரிவாக தெரிந்து கொள்ள இந்த காணொளியை காணுங்கள்:
 

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உச்சம் தொட்ட டிஸ்சார்ஜ் எண்ணிக்கை – தமிழக மக்களுக்கு ஆறுதல் செய்தி!