Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

'ரிபப்ளிக் டிவியின் அர்னாப் கோஸ்வாமி லஞ்சம் கொடுத்த பணத்தில் வாங்கிய 3 கிலோ வெள்ளி' - மும்பை காவல்துறை

'ரிபப்ளிக் டிவியின் அர்னாப் கோஸ்வாமி லஞ்சம் கொடுத்த பணத்தில் வாங்கிய 3 கிலோ வெள்ளி' - மும்பை காவல்துறை
, செவ்வாய், 29 டிசம்பர் 2020 (15:33 IST)
இந்தியாவில் உள்ள சில முக்கிய நாளிதழ்களிலும் அவற்றின் இணையதளங்களிலும் வெளியான முக்கிய செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

 
இந்தியத் தொலைக்காட்சிகளின் டிஆர்பி புள்ளிகளை கணக்கிடும் 'பார்க்' அமைப்பின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி பர்த்தோ தாஸ்குப்தா, ரிபப்ளிக் தொலைக்காட்சியின் உரிமையாளரும் ஆசிரியருமான அர்னாப் கோஸ்வாமி தனக்கு பல லட்சம் ரூபாயும், மதிப்புமிக்க கைக்கடிகாரம் ஒன்றையும் லஞ்சமாகக் கொடுத்ததாக மும்பை போலீசிடம் தெரிவித்துள்ளார் என தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது .
 
2013 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளுக்கு இடையே 'பார்க்' (BARC) அமைப்பின் தலைமை செயல் அதிகாரியாக இருந்தவர் இவர். இந்தியத் தொலைக்காட்சிகளின் டிஆர்பி புள்ளிகளை கணக்கிடும் 'பார்க்' அமைப்பின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி பர்த்தோ தாஸ்குப்தா, ரிபப்ளிக் தொலைக்காட்சியின் உரிமையாளரும் ஆசிரியருமான அர்னாப் கோஸ்வாமி தனக்கு பல லட்சம் ரூபாயும், மதிப்புமிக்க கைக்கடிகாரம் ஒன்றையும் லஞ்சமாகக் கொடுத்ததாக மும்பை போலீசிடம் தெரிவித்துள்ளார் என தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
 
2013 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளுக்கு இடையே 'பார்க்' (BARC) அமைப்பின் தலைமை செயல் அதிகாரியாக இருந்தவர் இவர். பர்த்தோ தாஸ்குப்தாவின் வீட்டில் மூன்று கிலோ வெள்ளி கைப்பற்றப்பட்டதாகவும், அது அர்னாப் கோஸ்வாமி தனது ஆங்கில செய்தித் தொலைக்காட்சியான ரிபப்ளிக் டிவி மற்றும் இந்தி செய்தி தொலைக்காட்சியான ரிபப்ளிக் பாரத் ஆகியவற்றை பிரபலப்படுத்த தாஸ்குப்தாவுக்கு லஞ்சமாக வழங்கிய பணத்தில் வாங்கப்பட்டது என்றும் மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது.
 
தொலைக்காட்சிகளின் டிஆர்பி முறைகேடு வழக்கில் இதுவரை தாஸ்குப்தா உள்பட 15 பேரை மும்பை காவல்துறை கைது செய்துள்ளது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோபத்தில் ஜியோ டவரை நாசமாக்கும் விவசாயிகள்! – பஞ்சாப் எச்சரிக்கை!