Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ராஜ் தாக்கரே: ராகுல் காந்தி ஏன் பிரதமராகக் கூடாது என்று கேட்கிறார் மாஹாராஷ்டிர தலைவர்

Advertiesment
Raj Thackeray
, செவ்வாய், 23 ஏப்ரல் 2019 (21:03 IST)
பிரதமராக ராகுல் காந்திக்கு ஒரு வாய்ப்பளிக்க வேண்டும் என்று மகராஷ்ட்ர நவ நிர்மாண் சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்ரே கூறி உள்ளார்.
பிபிசி இந்தி சேவைக்கு அளித்த நேர்காணல் ஒன்றில், தாக்ரே, "ஏன் ராகுல் பிரதமராக கூடாது? நாம் மோதியை வைத்து ஒரு முயற்சி செய்து பார்த்தோம். அதில் தோற்றுவிட்டோம். ஏன் ராகுல் காந்தியை வைத்து மற்றொரு முயற்சி செய்து பார்க்கக் கூடாது?" என கேட்டுள்ளார்.
 
மஹராஷ்ட்ர நவ நிர்மாண் சேனா கட்சி தொடங்கி 13 ஆண்டுகள் ஆகப் போகிறது. 2014ஆம் ஆண்டு வரை அந்தக் கட்சி போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் தோல்வியையே தழுவி வந்திருக்கிறது.
 
வரும் மக்களவைத் தேர்தலில் அந்தக் கட்சி போட்டியிடவில்லை என்றாலும், மஹாராஷ்ட்ரா முழுவதும் பல்வேறு பொது கூட்டங்களில் ராஜ் தாக்ரே கலந்து கொண்டு பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களிக்காதீர்கள் என பிரசாரம் செய்து வருகிறார்.
 
பிரதமர் நரேந்திர மோதி மற்றும் பா.ஜ.க தலைவர் அமித் ஷாவுக்கு எதிராக எல்.ஈ.டி. திரை உதவியோடு தாக்கரே பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
 
2013ஆம் ஆண்டு ராஜ் தாக்ரே குஜராத் பயணம் மேற்கொண்ட பின், குஜராத் மாதிரி வளர்ச்சியை முன் வைத்தார். இப்போது என்ன ஆகிவிட்டது? ஏன் இந்த திடீர் மாற்றம் என அவர்களிடம் கேட்டதற்கு, தாக்ரே, "ரத்தன் டாடா அழைப்பின் பெயரில் குஜராத் சென்றேன். குஜராத் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் எங்களை தொடர்ந்து பின் தொடர்ந்தார்கள். எங்களுக்கு பொய்யான சித்திரம் அங்கு காட்டப்பட்டது. ஆனால், மோதி வேறு மாதிரியானவர் என்பதை, அவர் பிரதமர் பொறுப்பேற்ற பின் உணர்ந்தோம்" என்கிறார்.
 
இவரது பிரசாரங்களுக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியும், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியும் நிதி அளிப்பதாக பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து குற்றம்சாட்டி வருவது தொடர்பாக கேள்வி எழுப்பிய போது, "நரேந்திர மோதியும், அமித் ஷாவும் கடந்த 5 வருடங்களாக பொய்யுரைத்து வந்து இருக்கிறார்கள். இதனையெல்லாம் எப்படி எதிர்கொள்வதென அவர்களுக்கு தெரியவில்லை. என்னுடைய பிரசாரங்களை கேள்வி கேட்பதற்கு பதிலாக, பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி மற்றும் வேலையில்ல திண்டாட்டம் தொடர்பான என் கேள்விகளுக்கு பா.ஜ.க. பதிலளிக்க வேண்டும்."
 
தொடர்ந்து வட இந்தியர்களுக்கு எதிராக கருத்து கூறி வந்த ராஜ் தாக்ரே, வட இந்தியர்கள் தொடர்பான நிகழ்வில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் அவர் இந்தியில் பேசினர். மஹாராஷ்ட்ராவில் இந்தியில் பேச மாட்டேன் என்ற நிலைப்பாட்டிலிருந்து அவர் விலகியதாகவே தெரிகிறது.
 
மஹாராஷ்ட்ரா மராத்தியர்களுக்கு மட்டும் என்ற நிலைபாட்டிலிருந்து விலகிவிட்டீர்களா என்ற கேள்விக்கு, அவர் நேரடியாக பதில் சொல்லவில்லை. அவர், "நான் என் நிலைபாட்டிலிருந்து விலகவில்லை. உள்ளூர் இளைஞர்களுக்கு முன்னுரிமை தர வேண்டும். பிகார் வேலை வாய்ப்புகள், பிகாரிகளுக்கானவை. அந்தந்த பகுதி வளம் அப்பகுதி மக்களுக்கானது. நாங்கள் யாருக்கும் எதிரானவர்கள் அல்ல" என்றார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

37 பயங்கரவாதிகளுக்கு இன்று மரண தண்டனை நிறைவெற்றம்