Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கர்நாடக தேர்தல்: “ராகுல் இன்னும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை.“

Advertiesment
கர்நாடக தேர்தல்: “ராகுல் இன்னும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை.“
, புதன், 16 மே 2018 (14:42 IST)

கர்நாடக தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வெற்றி. ஆனால், காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சியமைக்க முயற்சி செய்து வருவது குறித்து, 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டமா? பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றுபடும் முயற்சிக்கு ஊக்கமளிக்குமா? என வாதம் விவாதம் பகுதியில் நேயர்களிடம் கேட்டிருந்தோம். அதற்கு நேயர்கள் அளித்த பதில்களை இங்கே தொகுத்தளிக்கிறோம்.

webdunia

ஃபேஸ்புக்கில் சரோஜா பாலசுப்பிரமணியன், "பாஜகவின் எதிர்க்கட்சிகளுக்கு இது ஒரு எச்சரிக்கை மணி, அவர்கள் இன்னும் வலுவாக ஒன்று கூட இது ஒரு சந்தர்ப்பம். கடந்த தேர்தல்களிலிருந்து ராகுல் இன்னும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை." என்கிறார்.
 

webdunia

மேலும் அவரே, " ராகுல், மோடியுடன் மோதுவது வெறுந்தலையோடு மலை மீது மோதுவதற்கு சமம்." என்றும் பதிவிட்டுள்ளார்.
 

webdunia

தமிழினி காமராஜ், இது 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டம் என்கிறார்.
 

webdunia

 

 

எல்லாமே சந்தர்ப்பவாதம் தான் . இதே பின் வாசல் வேலைகளை கோவாவிலும் மேகாலயாவிலும் பா.ஜ.க செயல்படுத்தியது அதிலும் மேகாலயாவில் 21 தொகுதிகளை காங்கிரசும், 2 தொகுதிகளை பிஜேபியும் பெற்றது ஆனால் ஆட்சி அமைத்தது பி.ஜே.பி என்று பதிவிட்டுள்ளார் மணி முத்துராமலிங்கம்.
 

webdunia

காங்கிரஸ் அந்தந்த மாநிலங்களில் உள்ள பலம் வாய்ந்த பெரிய பலமில்லாத சிறிய கட்சிகள் என அனைத்து கட்சிகளையும் அரவணைத்து விட்டு கொடுத்து போட்டியிட்டால் மட்டுமே வெற்றி பெற முடியும். 


Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஹிந்தி பேசாத மாநிலங்களிலும் பாஜகவால் வெற்றி பெறமுடியும் - மோடி