பிரிட்டனின் கிளாஸ்கோ நகரில் நடக்க இருக்கும் பருவநிலை மாற்றமாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் பங்கேற்க மாட்டார் என அநநாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இதற்கான காரணம் எதையும் ரஷ்யா அளிக்கவில்லை. எனினும் பருவநிலை மாற்றம் ரஷ்யாவுக்கு முக்கியமானது என கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
கிளாஸ்கோவில் வரும் 31-ம் தேதியில் இருந்து நவம்பர் 12-ஆம் தேதி வரை பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாடு நடக்கிறது.
இந்த மாநாட்டில் ரஷ்யா பங்கேற்காதது உலகளாவிய முயற்சிகளுக்குப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.