ஜப்பானில் மக்கள் தொகை கடந்த ஐந்து ஆண்டுகளில் சுமார் பத்து லட்சம் குறைந்துள்ளது என புதிய மக்கள்தொகை கணக்கெடுப்புகள் காட்டுகின்றன.
கடந்த 1920ஆம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக மக்கள் தொகை குறைந்துள்ளது இப்போதுதான் பதிவாகியுள்ளது.
எனினும் மக்கள்தொகையியல் வல்லுநர்கள் நீண்டகாலமாகவே இந்தப் போக்கு இருக்குமென எதிர்பார்த்திருந்தனர்.
ஜப்பானில் குறைந்துவரும் பிறப்பு வீதம் மற்றும் குடிவரவு ஆகியவை குறைந்ததே இதற்கு முக்கியமான காரணங்களாகப் பார்க்கப்படுகின்றன.
இந்தப் பிரச்சினை மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்வரும் 2050ஆம் ஆண்டுவாக்கில் ஜப்பானியக் குடிமக்களில் சுமார் நாற்பது சதவீதம் அளவுக்கு 65 வயதுக்கு அதிகமானவர்களாக இருப்பார்கள் என அரசின் மக்கள்தொகை ஆராய்ச்சிகள் கணக்கிட்டுள்ளன.
இதன் காரணமாக முதியோர்களை பராமரிக்கும் தொகை பெருமளவில் அதிகரிக்கும் எனும் கவலைகளும் எழுந்துள்ளன.