Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பெட்ரோல் விலை வரலாறு காணாத சரிவு: போட்டியை துவங்கிய சௌதி

Advertiesment
பெட்ரோல் விலை வரலாறு காணாத சரிவு: போட்டியை துவங்கிய சௌதி
, திங்கள், 9 மார்ச் 2020 (14:14 IST)
மிகப் பெரிய எண்ணெய் உற்பத்தியாளரான சௌதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் விலைப் போட்டியைத் தொடங்கியதைத் தொடர்ந்து ஆசியாவில் பெட்ரோலியம் விலை சுமார் 30 சதவீதம் சரிந்தது.
 
பெட்ரோலிய விலையில் ஸ்திரத்தன்மையை உண்டாக்கும் நோக்கத்துடன், உற்பத்தியை பெரிய அளவில் குறைப்பதற்கு ரஷ்யாவுடன் ஒப்பந்தம் ஒன்றை எட்ட முயற்சித்தது மிகப் பெரிய எண்ணெய் உற்பத்தியாளரான சௌதி அரேபியா. ஆனால், அதற்கு ரஷ்யா ஒப்புக்கொள்ளவில்லை. அந்த முயற்சி தோல்வியடைந்ததை அடுத்து, சௌதி அரேபியா எண்ணெய் விலையை குறைத்தது.
 
முன்னதாக உற்பத்திக் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்துவது தொடர்பாக எண்ணெய் உற்பத்தி நாடுகளின் கூட்டமைப்பான ஒபெக் - ரஷ்யாவுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடந்தது.
 
நிலையில்லாமல் தடுமாறி வந்த எண்ணெய் சந்தையில், விலை அளவுகோலாகப் பார்க்கப்படும் ப்ரெண்ட் ஆயில் ஃப்யூச்சர்ஸ் விலை 31.02 டாலர்களாக திங்கள்கிழமை குறைந்தது.
 
14 நாடுகளைக் கொண்ட ஒபெக் அமைப்புக்கும் அதன் உறுப்பினர் அல்லாத எண்ணெய் உற்பத்தி நாடுகளுக்கும் இடையே பேச்சு வார்த்தை தொடங்கிய வெள்ளிக்கிழமை முதலே எண்ணெய் விலை வீழ்ச்சியை சந்திக்கத் தொடங்கியது.
 
இந்த எண்ணெய் சரிவு நிகழ்ந்திருக்கும் நிலையில் இந்தியாவின் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ், திங்கள்கிழமை சந்தை தொடங்கியதிலிருந்து இதுவரை 1,635 புள்ளிகள் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனா பீதி: கோழி கிலோ ரூ.38க்கு விற்பனை - கண்டுகொள்ளாத மக்கள்!