Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிகா வைரஸ்: ஒலிம்பிக் போட்டிகளை ஒத்திவைக்க கோரிக்கை

சிகா வைரஸ்: ஒலிம்பிக் போட்டிகளை ஒத்திவைக்க கோரிக்கை
, சனி, 28 மே 2016 (20:34 IST)
சிகா வைரஸ் பரவும் ஆபத்துக் காரணமாக பிரேசிலில் ஆகஸ்ட் மாதம் நடக்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளை தள்ளிவைக்கவேண்டுமா அல்லது ரியோ டி ஜெனெரோ நகரில் இருந்து வேறு இடத்துக்கு மாற்ற வேண்டுமா என்பதை உலக சுகாதார நிறுவனம் பரிசீலிக்க வேண்டும் என்று நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணர்கள் கூட்டு கடிதம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள்.


 

 
பன்னிரெண்டுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த இந்த நிபுணர்கள் சிகா வைரஸ் மூலம் உலக பொது சுகாதாரத்துக்கு தெளிவான ஆபத்து ஏற்பட்டிருப்பதாக எச்சரித்துள்ளனர்.
 
இது தொடர்பாக சர்வதேச ஒலிம்பிக் குழுவுக்கு ஆலோசனை சொல்வதற்கான சிறப்பு நிபுணர்கள் அடங்கிய குழு ஒன்றை அமைக்கும்படியும் அவர்கள் உலக சுகாதார நிறுவனத்துக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்கள்.

webdunia

 

 
முன்னதாக அட்லாண்டாவிலிருந்து இயங்கும் நோய்கள் கட்டுப்பாட்டு மையத்தின் தலைவர் பிரேசிலில் ஏற்பட்டிருக்கும் சிகா வைரஸ் பரவல் என்பது ஒலிம்பிக் போட்டிகளை ரத்து செய்யும் அளவுக்கு பெரியதொரு ஆபத்தாக உருவாகவில்லை என்று கூறியிருந்தார்.
 
கருவுற்றிருக்கும் பெண்களுக்கு சிகா வைரஸ் தொற்று ஏற்பட்டால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளின் மூளை கடுமையாக பாதிக்கப்படும் என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குதிரை பேரம் நடத்தி ஆட்சியை பிடிக்க திமுக திட்டம்?: கருணாநிதியின் சூட்சம பேட்டி