Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பூனை பசிக்கிறது என்று சொல்வது இனி உங்களுக்குப் புரியலாம்: மியாவ் சத்தத்தை மொழி பெயர்க்க ஓர் ஆப்

பூனை பசிக்கிறது என்று சொல்வது இனி உங்களுக்குப் புரியலாம்: மியாவ் சத்தத்தை மொழி பெயர்க்க ஓர் ஆப்
, வெள்ளி, 20 நவம்பர் 2020 (15:34 IST)
அமேசானின் அலெக்ஸா-வுக்காக வேலை செய்த முன்னாள் பொறியாளர் ஒருவர், பூனையின் மியாவ் சத்தத்துக்கு என்ன பொருள் என்று கண்டு பிடிக்க ஒரு செயலியை உருவாக்கி இருக்கிறார். அந்த செயலியின் பெயர் மியாவ் டாக் (Meow Talk).

இந்த மியாவ் டாக் செயலி முதலில் பூனையின் சத்தத்தை பதிவு செய்து கொண்டு, அதன் பின், அதன் பொருளைச் சொல்ல முயற்சிக்கிறது.

பூனையின் உரிமையாளர்களும், பூனைகளின் சத்தத்துக்கு என்ன பொருள் என்று சொல்கிறார்கள். இதனால், இந்த செயற்கை நுண்ணறிவு மென்பொருளில் இருந்து ஒரு டேட்டா பேஸே உருவாகிக் கொண்டு இருக்கிறது.

இதுவரை மொத்தம் 13 சொற்கள் மட்டுமே இருக்கிறதாம். "பசிக்கிது" "சாப்பிடக் கொடுங்க" "என்னை தனியாக விடுங்கள்" என மிகச் சில சொற்கள் மட்டுமே இருக்கிறதாம்.

பூனைகள் பொதுவாக, ஒரே மாதிரியான மொழியைப் பகிர்வதில்லை என்கிறது ஆராய்ச்சி.

ஒவ்வொரு பூனையின் மியாவ் சத்தமும், தனித்தன்மை கொண்டதாகவும், தங்களின் உரிமையாளருக்கு என்றே தனித்துவமானதுமாகவும் இருக்கிறது.

எனவே, பொதுவாக பூனைகளின் மியாவ் சப்தத்துக்கு, ஒரு டேட்டா பேஸை உருவாக்குவதை விட, இந்த செயலியின் மொழி பெயர்ப்பு, ஒவ்வொரு தனிப்பட்ட பூனைக்கும் மாறுபடும்.

பூனையின் மியாவ் சப்தத்தை பதிவு செய்வது மற்றும் அதற்கான பொருளை பிரித்துப் பட்டியலிடுவதால், செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர வழிக்கற்றல் மென்பொருளால், ஒவ்வொரு பூனையின் குரலையும் இன்னும் சிறப்பாக புரிந்து கொள்ள முடியும். இந்த செயலியை எவ்வளவு அதிகமாகப் பயன்படுத்துகிறோமோ, அந்த அளவுக்கு அதிக துல்லியமாக இது விடைகளைக் கொடுக்கும்.

இதன் நோக்கமே, ஒரு ஸ்மார்ட் காலர் உருவாக்குவது தான் என, அக்வேலான் செயலி மேம்பாட்டாளர்கள் குழுவின் தொழில்நுட்ப ப்ரோகிராம் மேலாளர், ஜேவியர் சான்சேஸ் ஒரு வலைதளக் கூட்டத்தில் சொல்லி இருக்கிறார்.

இந்த தொழில்நுட்பம், பூனையின் மியாவ் சப்தத்தை உடனடியாக மொழி மாற்றிக் கொடுக்கும், மனித குரலைக் கொண்ட, பூனையிடம், இந்த ஸ்மார்ட் காலர் வழியாகப் பேசலாம்.

"இது இப்போது மிகவும் முக்கியமானது என்று நான் நினைக்கிறேன், ஏனென்றால் தற்போது சமூக இடைவெளியுடன், பூனை உட்பட, வெகு சிலருடன் நீங்கள் வீட்டில் அடைத்து வைக்கப்பட்டுள்ளீர்கள்" என்கிறார் சான்செஸ்.

இது அவர்களின் பூனைகளோடு பேச, தொடர்பு கொள்ள உதவும், குறைந்தபட்சம், அவர்களின் பூனையின் எண்ணத்தைப் புரிந்து கொள்ளவாவது உதவும். அதோடு பூனைகளோடு ஒரு தொடர்பை நிறுவ உதவும். என்கிறார் சான்செஸ்.

இந்த செயலி, கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இலவசமாகக் கிடைக்கிறது.
webdunia

இந்த செயலி, தன் ஆரம்ப காலங்களில் இருப்பதால், இந்த செயலி குறித்த விமர்சனங்களும் கலவையாக இருக்கின்றன. சில பயனர்கள், இந்த செயலியில் தவறு இருப்பதாக புகார் அளிக்கிறார்கள்.

இது தொந்தரவு செய்து கொண்டே இருக்கிறது என ஒரு விமர்சனம் இருக்கிறது.

நான் இதை பதிவிரக்கம் செய்த பின், என்னால் இதைப் பயன்படுத்த முடியவில்லை, தொடர்ந்து வைபை பிரச்சனை இருக்கிறது எனச் சொல்லிக் கொண்டே இருக்கிறது.

எனக்கு இதன் மொழிபெயர்ப்புகள் கிடைத்துக் கொண்டு இருக்கின்றன. எனக்கு இந்த செயலி மிகவும் பிடித்து இருக்கிறது என மற்றொரு விமர்சனம் இருக்கிறது.

இந்த செயலிக்கு, கூகுள் ப்ளே ஸ்டோரில் சராசரியாக 4.3 ரேட்டிங் இருக்கிறது.

இப்போதைக்கு, நீங்கள் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளாவிட்டால், இது மிகவும் வேடிக்கையான பயன்பாடாக இருக்கும்" என ஒரு விமர்சனம் கூறியது.

"யாருக்குத் தெரியும், காலப்போக்கில், இது எல்லா சமயங்களிலும் என் பூனையின் உண்மையான மியாவைக் கற்றுக் கொள்ளும். இது நிச்சயமாக நம்பிக்கைக்குரியதாக தோன்றுகிறது. "

"உண்மையிலேயே அருமையான கருத்தாக்கம். என் பூனைகள் ஒருபோதும் பேசுவதை நிறுத்தாததால் நான் அதை அனுபவித்திருக்கிறேன்" என மற்றொரு விமர்சனம் கூறுகிறது.
இருப்பினும், தரவுகள் எவ்வாறு சேமிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன என்பதில் பயனர்கள் தனியுரிமை குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.

இந்த செயலியின் தனியுரிமைக் கொள்கையில், இந்த செயலி இன்னும் "மேம்பாட்டு கட்டத்தில்" இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. அதோடு, தனியுரிமை குறித்து கவலைப்படுபவர்கள் யாராக இருந்தாலும், செயலியை அழித்துவிட்டு, ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிடிபிஆர் தனியுரிமைச் சட்டத்துடன் முழுமையாக இணங்கும் வரை காத்திருக்கச் சொல்கிறது.

பெரும்பாலான பூனைகளின் குரல்கள் உண்மையில் மனிதர்களுடன் தொடர்பு கொள்வதற்குத் தான். ஏனெனில் பெரும்பாலும் பூனை வைத்திருப்பவர்கள், அவைகளுக்கு பதிலளிப்பார்கள் "என பூனை நடத்தை மற்றும் நடவடிக்கை நிபுணர் ஜூலியட் ஜோன்ஸ் கூறுகிறார்.

இந்த செயலி, பூனை வைத்திருக்கும் உரிமையாளர்களின் வகைப்படுத்தலை நம்பி இருப்பதால், தவறான தகவல் தொடர்புக்கு இடம் உள்ளது, என்று கூறுகிறார் ஜோன்ஸ்.
"சில தவறுகள் இருக்கலாம், அவை உரிமையாளர்களுக்கு தங்கள் பூனைகள் என்ன உணர்கின்றன என்பது பற்றிய தவறான எண்ணத்தை அளிக்கக்கூடும்.

இது பூனை, உரிமையாளர் மற்றும் அவற்றின் உறவுக்கு தீங்கு விளைவிக்கும். உதாரணமாக, ஒரு பூனை தொடர்ந்து குறைந்த ஒலியில் கத்திக் கொண்டு இருக்கிறது (ஆங்கிலத்தில் Purring) என்றால், பூனைகள் மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் இருக்கின்றன என்று அர்த்தமல்ல. அந்த குரலுக்கு, பாசத்தைத் தேடுவதாகவோ அல்லது தன் நெருக்கடியான சூழலை வெளிப்படுத்துவதாகவோ இருக்கலாம். இந்த செயலியை அதன் தற்போதைய வடிவத்தில், பொழுதுபோக்குக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்கிறார் ஜோன்ஸ்.

ஒரு பூனையின் மியாவ் சப்தத்தை, நம்மால் ஒரு போதும் மனித வார்த்தைகளாக மாற்ற முடியாமல் போகலாம் என்று பூனை நடத்தை நிபுணரும், 'பூனைகளைப் பற்றி பேசலாம்' என்கிற புத்தகத்தின் ஆசிரியருமான அனிதா கெல்சி கூறுகிறார். பூனைகள், மனித கண்ணோட்டத்தில், என்ன சொல்கின்றன என்று வேண்டுமானால், வேடிக்கையாக சிந்தித்துக் கொள்ளலாம். இந்த செயலி பார்க்க வேடிக்கையாக இருக்கிறது. இதைப் பயன்படுத்தி உங்கள் பூனைகளோடு விளையாடுவதில் எந்த பாதிப்பும் இல்லை என்கிறார் அனிதா.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குடுக்குற தெய்வம் கூரையை பிச்சிகிட்டுதான் கொடுக்கும் – உண்மையான பழமொழி!