Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Monday, 14 April 2025
webdunia

நியூ கலிடோனியா: பிரான்சிடம் இருந்து சுதந்திர தனிநாடு வேண்டாம் என்ற தீவுக்கூட்டம் - ஏன்?

Advertiesment
BBC Tamil
, திங்கள், 5 அக்டோபர் 2020 (14:59 IST)
பிரெஞ்சு நிலப்பகுதியிலிருந்து தனித்து இருக்கும் பல்வேறு தீவுகளை உள்ளடக்கிய பிராந்தியமான நியூ கலிடோனியாவில் உள்ள மக்கள் பிரான்சிலிருந்து பிரிந்து சுதந்திர நாடாவதற்கு எதிராக வாக்களித்துள்ளனர்.

இதுதொடர்பாக நடந்த பொது மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில், நியூ கலிடோனியா தீவுக்கூட்டத்தை சேர்ந்த 53.26 சதவீத மக்கள் தொடர்ந்து பிரான்ஸுடன் இணைந்திருப்பதற்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர் என்று ஏ.எஃப்.பி முகமை செய்தி வெளியிட்டுள்ளது. இந்த வாக்கெடுப்பில் அந்த பிராந்தியத்தை சேர்ந்த 85.6 சதவீத மக்கள் பங்கேற்றிருந்தனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இதேபோன்ற வாக்கெடுப்பில், இதைவிட அதிகமாக மக்கள், அதாவது 56.7 சதவீத மக்கள் பிரான்சின் அங்கமாக தொடர ஆதரவாக வாக்களித்திருந்தனர்.

நியூ கலிடோனியா கிட்டத்தட்ட 170 ஆண்டுகளாக ஒரு பிரெஞ்சு பிரதேசமாக உள்ளது.
இந்த முடிவு தொடர்பாக ட்விட்டரில் கருத்துத் தெரிவித்துள்ள பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோங், இந்த முடிவை "குடியரசின் மீதான நம்பிக்கையின் அடையாளம்" என்று வரவேற்றுள்ளார்.

பிரான்ஸுக்கும் இந்த பிராந்தியத்துக்கும் இடையே இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒரு ஒப்பந்தத்தின்படியே, இந்த பொது மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. 1980களில் இந்த தீவுக்கூட்டத்தை சேர்ந்த பூர்வீக 'கனக்' மக்களுக்கும் ஐரோப்பிய குடியேறிகளின் சந்ததியினருக்கும் இடையிலான சுதந்திரம் தொடர்பான வன்முறை மோதல்களைத் தொடர்ந்தே இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

நியூ கலிடோனியாவின் மக்கள் தொகையில் சுமார் 40 சதவீதம் பேர் பூர்விக கனக் சமுதாயத்தை சேர்ந்தவர்கள். அதே நேரத்தில், பெரும்பாலும் இந்த பிராந்தியத்திலேயே பிறந்து, வளர்ந்த ஐரோப்பியர்கள் மொத்த மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினராகவும், மற்றவர்கள் பசிபிக் பகுதியை சேர்ந்த மற்ற தீவுகளிலிருந்து வந்தவர்கள் அல்லது கலப்பு பாரம்பரியத்தை கொண்டவர்களாகவும் உள்ளனர்.

1998ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட நோமியா உட்பட பல ஒப்பந்தங்கள் இந்த பிரதேசத்திற்கு அதிக சுயாட்சிக்கான அங்கீகாரத்தை பெற்றுத் தந்தது.

இந்த ஒப்பந்தத்தின் கீழ், நியூ கலிடோனியாவில் சுதந்திரம் குறித்து அதிகபட்சம் மூன்று பொது மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்புகள் வரை நடத்த அனுமதிக்கப்படுகிறது. உள்ளூர் சட்டமன்றத்தில் மூன்றில் ஒரு பகுதியினர் கோரினால், 2022க்குள் மூன்றாவது வாக்கெடுப்பும் நடைபெறலாம்.

மின்னணு பொருட்கள் தயாரிப்பில் முக்கிய அங்கமான நிக்கல் அதிகளவில் நியூ கலிடோனியாவில் கிடைக்கிறது. அதுமட்டுமின்றி, இந்த தீவுக்கூட்டத்தை, அரசியல் மற்றும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த சொத்தாக பிரான்ஸ் கருதுகிறது.

சட்டப்படி, பரந்துபட்ட அளவிலான சுயாட்சியை கொண்டிருந்தாலும், பாதுகாப்பு மற்றும் கல்வி போன்ற விடயங்களுக்கு பிரான்சையே இந்த பிராந்தியம் பெரிதும் சார்ந்துள்ளது. மேலும், இப்போதுவரை பிரான்ஸ் அரசிடமிடருந்து பல்வேறு சலுகைகளை பெற்று வருகிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினராக உள்ள தன்னாட்சியற்ற 17 பிராந்தியங்களில் ஒன்றாக திகழும் நியூ கலிடோனியாவில் இன்னும் காலனித்துவம் முடிவுக்கு வரவில்லை.
1853ஆம் ஆண்டில் 270,000 மக்கள் வசித்து வந்த இந்த தீவுக்கூட்டத்தை பிரான்ஸ் முதன்முதலில் உரிமை கோரியது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னை புறப்பட்ட ஓபிஎஸ்; அவசர ஆலோசனயில் ஈபிஎஸ்! – அதிமுகவில் பரபரப்பு!