Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நரேந்திர மோதி காஷ்மீர் அரசியல் தலைவர்களுடன் ஆலோசனை: இந்திய அரசின் திட்டம் என்ன?

Webdunia
சனி, 26 ஜூன் 2021 (00:15 IST)
நீண்ட நாட்களாக தனித்துவிடப்பட்ட காஷ்மீர் அரசியல் தலைவர்களுடன் இந்திய பிரதமர் மோதி நடத்திய ஆலோசனைக் கூட்டத்திற்கு விமர்சனம், வரவேற்பு என இரண்டும் கிடைத்துள்ளது.
 
பாஜக அரசு காஷ்மீர் மீது காட்டிய கடும்போக்கை தளர்த்தி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டது, 2019ஆம் ஆண்டு ஆகஸ்டு ஐந்தாம் தேதிக்கு பிறகு தாங்கள் ஓரம்கட்டப்பட்டதாக நினைத்த ஜம்மு மற்றும் காஷ்மீர் அரசியல் தலைவர்களுக்கு நிம்மதியை கொடுத்துள்ளது.
 
2019ஆம் ஆண்டு ஆகஸ்டு 5ஆம் தேதி, மத்திய அரசின் தலையீடு இல்லாமல் மாநிலத்திற்கு நில உரிமை, குடியுரிமை போன்ற சில விஷயங்களில் அதிகாரத்தை வழங்கும் சட்டப்பிரிவை இந்திய அரசு நீக்கியது.
 
இந்த ஆலோசனைக்கூட்டம் எத்தனை மணி நேரங்கள் நடைபெற்றதோ அதைக் காட்டிலும் அதிக நேரம் அதற்கான நேரம் முடிவு செய்யப்படுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
 
 
நான்கு முன்னாள் முதல்வர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதில் மூன்று பேர் எட்டு மாதங்களாக சிறை வைக்கப்பட்டிருந்தனர்.
 
ஜம்மு, காஷ்மீரை சேர்ந்த பிற அரசியல் தலைவர்களும் மோதி மற்றும் அமித் ஷாவுடனான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
 
சிறிது மாதங்களுக்கு முன்பு காஷ்மீரின் அரசியல் கூட்டணியை அமித் ஷா `குப்கார் கூட்டம்` என்று தெரிவித்திருந்தார்.
 
ஃபரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெஹபூபா முஃப்தி மற்றும் பிற தலைவர்கள் வசிக்கும் மலைகள் கொண்ட வசதியான இடம்தான் குப்கார்.
 
இந்தியா-சீனா எல்லை: லடாக்கில் பின்வாங்காத படைகள், நீடிக்கும் பதற்றம்
சீன வீரர்களின் உயிரிழப்பை மிகைப்படுத்திய `பிளாக்கர்' சிறையில் அடைப்பு
"குப்கார் பிரகடனத்திற்கான மக்கள் கூட்டணி" 2019ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 4ஆம் தேதி அமைக்கப்பட்டது. ஜம்மு, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கும் இந்திய சட்டப்பிரிவு 370 மற்றும் 35-A ஆகியவற்றில் மாற்றம் ஏற்படுத்தும் எந்த முயற்சியையும் எதிர்க்கும் நோக்கில் இந்த கூட்டணி உருவாக்கப்பட்டது
 
அடுத்த நாள் அந்த கூட்டணியில் இடம்பெற்ற தலைவர்கள், விடுதலை கோரிய தலைவர்கள் மற்றும் ஆர்வலர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இணையதளம் மற்றும் அனைத்துவித தொலைத்தொடர்பு வசதிகளும் முடக்கப்பட்டன.
 
ஜம்மு மற்றும் காஷ்மீர் முழுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அந்த கட்டுப்பாடுகள் அக்டோபர் மாதம்தான் விலக்கப்பட்டன. அதன்பின் காஷ்மீரின் அரசியல் தலைவர்களான அப்துல்லா மற்றும் முஃப்தியை ஓரம்கட்டி அமைதி, வளம் மற்றும் 'புதிய தலைமை'யுடன் 'புதிய காஷ்மீரை' உருவாக்கப்போவதாக சமிக்ஞை வழங்கினார் மோதி.
 
"குப்கார் பிரகடனத்திற்கான மக்கள் கூட்டணி" செய்தியாளர் சந்திப்பு
 
மெஹ்பூபா முஃப்தியின் பிடிபி கட்சியிலிருந்து விலகிய சில தலைவர்கள் மோதிக்கு ஆதரவாக `அப்னி பார்டி` (நமது கட்சி) என்ற ஒன்றை தொடங்கினார்கள்.
 
கடந்த 22 மாதங்களாக அப்துல்லா மற்றும் முஃப்தி குடும்பத்தினர் "தவறான கனவுகளை மக்களுக்கு உறுதியளிப்பதாக" இந்த புதிய தலைவர்கள் குற்றஞ்சாட்டினர். நாங்கள் எது சாத்தியமோ அதற்கான உறுதியை தருகிறோம். மாநில அதிகாரம் என்பது சாத்தியம் என நாங்கள் நம்புகிறோம். ஆனால் அதை மீறி நாங்கள் செல்ல மாட்டோம் என அப்னி கட்சியின் தலைவர் அல்டஃப் புகாரி பிபிசியிடம் தெரிவித்தார். இவர் 2016ஆம் ஆண்டு மெஹபூபா முஃப்தியின் ஆட்சியில் அமைச்சராக இருந்தவர்.
 
முன்னாள் ஹூரியத் தலைவர்கள், சஜத் லோன் மற்றும் 2010ஆம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் முதன்மையாக தேர்ச்சி பெற்ற டாப்பர் ஷா ஃபைசல் ஆகியோர் "புதிய காஷ்மீரின்" முகங்களாக பார்க்கப்படுகின்றனர். டெல்லி, ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள பாஜக தொண்டர்கள் இதுகுறித்து மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
 
ஆனால் மோதியின் இந்த திடீர் சமரச முயற்சி புதிய தலைமை என்ற பேச்சுக்கு இடைக்கால முற்றுப்புள்ளி வைத்துள்ளது. பரம்பரை ஆட்சியாளர்கள் என்று மோதி விமர்சித்த காஷ்மீர் தலைவர்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஏன் இந்த திடீர் முடிவு?
 
லடாக்கில் சீன ராணுவம் ஊடுறுவியதால் எழுந்த சர்வதேச அழுத்தத்திற்கு மோதி எதிர்வினையாற்றுகிறார் என நம்புவதாக காஷ்மீர் டைம்ஸின் ஆசிரியர் அனுராதா பாஷின் தெரிவிக்கிறார். மேலும் கிழக்கு எல்லையில் இந்திய ராணுவத்தின் நடவடிக்கைகள் குறித்த பாகிஸ்தானின் கவலையை குறைக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் அழுத்தமும் காரணமாக இருக்கலாம் என்கிறார்.
 
"ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா அமைதியான முறையில் வெளியேற வேண்டும் என விரும்புகிறது. 2003ஆம் ஆண்டு ஏற்பட்ட எல்லைக் கட்டுப்பாட்டு கோடில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை இந்தியா மற்றும் பாகிஸ்தான் மீண்டும் புதுப்பித்தது. மெய்யான எல்லை கோட்டில் சீனாவின் அழுத்தம் அதிகமாக உள்ளது. நெருக்கடியான பிரச்னைகளில் கவனம் செலுத்த காஷ்மீரில் அமைதியை விரும்புகிறது இந்தியா," என அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
 
இந்திய அரசு காஷ்மீர் விஷயத்தில் தனது பிடியை தளர்த்துவதற்கு காரணம் எதுவாக இருந்தாலும், நேற்றைய ஆலோசனைக் கூட்டம் பலதரப்பட்ட கோணங்களில் பார்க்கப்படுகிறது. சில பாஜக ஆதரவாளர்கள் தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர்.
 
"நீண்ட நாட்களாக மக்களை சுரண்டிக் கொண்டிருக்கும் அரசியல் கட்சிகளை நீக்கும் திட்டத்தில்தான் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டது. ஆனால் இப்போது மீண்டும் அவர்கள்தான் முக்கியத்துவம் பெருகின்றனர்," என பெயர் வெளியிட விரும்பாத பாஜக தலைவர் ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
 
இருப்பினும் 2019ஆம் ஆண்டு ஆகஸ்டு 5ஆம் தேதி ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கும் நாடாளுமன்றத்தின் முடிவை திரும்பப் பெற மோதிக்கு இருந்த அழுத்தத்தை அவர் புத்திசாலித்தனமாக திசை திருப்பிவிட்டார் என பலர் நம்புகின்றனர்.
 
மோடி மற்றும் அமித் ஷா
 
"வென்றவர்கள் யார் என்பதை நம்மால் முடிவு செய்ய முடியாது. இருப்பினும் மோதி ஒரு அடியை பின்னோக்கி எடுத்து வைத்திருப்பது, சீனா மற்றும் பாகிஸ்தான் பிரச்னையின் பின்புலத்தில் காஷ்மீர் பிரச்னையை கையாளுவதற்கான போதைய அவகாசத்தை தரும்" என காஷ்மீரின் மூத்த பத்திரிகையாளர் ஹரூன் ரேஷி தெரிவிக்கிறார்.
 
பிரிவினைவாத ஹூரியத் தலைவர்களை பேச்சுவார்த்தையில் சேர்க்க வேண்டும் என பாகிஸ்தான் வலியுறுத்தவில்லை. ஆனால் மாநில சுயாட்சியை மீண்டும் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தையை மேற்கொள்ள வேண்டும் என நிர்பந்தித்தது என அவர் மேலும் தெரிவிக்கிறார்.
 
மோதிரத்துக்குள் 300 அடி நீளத் துணி - இன்று எங்கே போனது?
 
உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டி: இந்திய அணி வெற்றி வாய்ப்பை தவறவிட்ட தருணங்கள்
 
"சட்டப்பிரிவு 370 மற்றும் 35A ஆகியவற்றை திரும்பப் பெறுவது என்பது நிகழாது. ஆனால் மோதியின் அரசு மாநிலத்தின் அதிகாரத்தை மீண்டும் வழங்க தயாராக உள்ளது. மேலும் வேலைவாய்ப்புகள் மற்றும் நிலவுடைமை ஆகியவை குறித்தும் உறுதியளிக்கும் என நினைக்கிறேன். இந்த அம்சங்களில்தான் ஜம்மு மற்றும் காஷ்மீரின் அரசியல் தலைவர்கள் ஒன்றாக இணைகின்றனர். நாளடைவில் சட்டப்பிரிவு 370ஐ திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கை மறைந்து போகும். பாகிஸ்தானால் அதை எதிர்க்க முடியாது," என்கிறார் ஹாரூன்.
 
இன்று நடைபெறும் நிதி நடவடிக்கை செயல்குழு கூட்டத்தில் (FATF) பாகிஸ்தான் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி வழங்குவதாக கூறப்படுவது குறித்து பேசப்படும். ஹரூன் உட்பட காஷ்மீர் பிரச்னையை கூர்ந்து கவனித்து வரும் பலர் இருநாடுகளும் காஷ்மீர் மீது கொண்டுள்ள கடும்போக்கை சீரமைப்பதற்கான கட்டாயங்களை கொண்டுள்ளன என்கின்றனர்.
 
"அது காஷ்மீருக்கு ஒரு நிம்மதியை கொடுக்கும். ஆனால் அந்த நிம்மதியின் கால அவகாசம் ஆப்கானிஸ்தான் மற்றும் கிழக்கு லடாக்கின் நிலையை பொறுத்து அமைந்துள்ளது" என சுட்டி காட்டுகிறார் ஹரூன்.
 
உள்ளூர் அரசியல் தலைவர்களை பொறுத்தவரை டெல்லிக்கு சென்று பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை சந்தித்து புகைப்படம் எடுப்பதே பெரும் ஊக்கத்தை தருவதாக இருக்கும் என காஷ்மீர் பிரச்னையை கூர்ந்து கவனிக்கும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
 
"உள்ளூர் தலைவர்கள் 2019ஆம் ஆண்டு ஆகஸ்டு 5ஆம் தேதிக்கு பிறகு அந்நியமாக்கப்பட்டதாக உணர்ந்தனர். காஷ்மீர் அரசியலில் தங்களுக்கு இடமில்லை என நினைத்தனர். எனவே காரணம் எதுவாக இருந்தாலும் டெல்லியுடன் இணைந்துள்ளது அவர்களுக்கு ஊக்கத்தை அளிக்கும். ஆனால் மக்களிடம் சட்டப்பிரிவு 370 குறித்துதான் இவர்கள் வாக்குறுதிகளை வழங்கியுள்ளனர். அது நிறைவேறவில்லை என்றால் அதற்கு ஈடாக வேன்றொன்றை மக்களிடம் இவர்களால் கொண்டு சேர்க்க முடியாது," என்கிறார் ஹரூன் ரஷி.
 
இதற்கிடையில் இந்த வருடம் பிப்ரவரி மாதம் போர்நிறுத்த ஒப்பந்தத்தை இந்தியா மற்றும் பாகிஸ்தான் புதுப்பித்தவுடன் காஷ்மீரில் வன்முறை குறைந்துள்ளதாக அங்குள்ள பாதுகாப்பு படையினர் தெரிவிக்கின்றனர்.
 
"காஷ்மீரில் பிரிவினைவாத செயல்பாடுகள் இருப்பதால் வன்முறைகள் நடந்து கொண்டுதான் உள்ளது ஆனால் தாக்குதலின் தீவிரம் குறைந்துள்ளது. இதற்கு காரணம் படைகளுக்கு இடையே இருந்த ஒத்துழைப்பு மற்றும் அதீத உளவு அமைப்பு. போராட்டங்களும் வன்முறை சம்பவங்களும் அவ்வப்போது நடைபெற்றாலும், எல்லைகள் மற்றும் ஜம்மு மற்றும் காஷ்மீருக்குள் வன்முறை சம்பவங்கள் கடந்த ஆண்டை காட்டிலும் குறைந்துள்ளது ஒரு நிம்மதியளிக்கும் விஷயமாக உள்ளது." என மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பி.எஸ்.என்.எல் பயனாளிகளுக்கு 4ஜி எப்போது? அதிரடி அறிவிப்பு..!

பிரிட்டன் பொதுத்தேர்தல் தோல்விக்கு நான் முழு பொறுப்பேற்கிறேன்: ரிஷி சுனக்

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் மறுப்பு: எதிர்ப்பு தெரிவித்து 150 வழக்கறிஞர்கள் கடிதம்!

உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கையை குறைப்பதா.? அரசாணைக்கு அண்ணாமலை எதிர்ப்பு..!!

கோவில் உண்டியல் பணம் திருடப்படுவதற்கு திமுக அரசு தான் காரணம்: இந்து முன்னணி

அடுத்த கட்டுரையில்
Show comments