Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கருச்சிதைவா, கருக்கலைப்பா? - கொலைக் குற்றச்சாட்டுக்கு 50 ஆண்டு சிறை

Advertiesment
கருச்சிதைவா, கருக்கலைப்பா? - கொலைக் குற்றச்சாட்டுக்கு 50 ஆண்டு சிறை
, வெள்ளி, 29 ஜூலை 2016 (21:11 IST)
சுசானா டியுன்னாஸ் ரோச்சா என்னும் அப்பெண்ணிற்கு அப்போது 19 வயது, உடல்நிலை சரியில்லாமல் அவர் மத்திய மெக்ஸிக்கோவின் குவானஜாடோ என்ற இடத்திலுள்ள மருத்துவமனைக்கு செல்லும் போது தான் கர்ப்பமாக இருப்பது அவருக்கு தெரியாது.
 


சுசானா டியுன்னாஸ் ரோச்சா கருச்சிதைவு ஏற்பட்டதற்காக ஆறு வருடங்கள் சிறையில் கழித்துள்ளார்.
 
அங்குதான் அவருக்கு கருச்சிதைவு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
 
“என் உடம்பிலிருந்து ஏதோ வெளியே வந்த மாதிரி நான் உணர்ந்தேன். அவர்கள் நான் கர்ப்பமாக இருந்ததற்கு என் மேல் புகார் கூற போவதாக தெரிவித்தனர் ஆனால் அவர்கள் அப்படி செய்யாமல் வேறு குற்றத்தை என்மீது சுமத்தினர்” என அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
 
சுசானாவின் மீது உறவினரைக் கொன்றதாக குற்றம் சுமத்தப்பட்டு, அவருக்கு 25 வருட சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.
 
இந்த வழக்கின் விசாரணை முறையற்று நடப்பதாக “பெண்களை விடுதலை செய்” என்ற மெக்ஸிக்கோவின் தொண்டு நிறுவனம் தெரிவிக்கிறது.
 
"உனக்கு குழந்தை இருந்ததாக சத்தியம் செய்து சொல்" என்று தன் முன் சிலுவையில் அறைந்த இயேசுவின் படத்தை காட்டியதாக நினைவு கோருகிறார் சுசானா.
 
கருச்சிதைவு ஒரு சட்டரீதியான குற்றம்:
 
மெக்ஸிக்கோவில், சுமார் 700 பெண்கள் உண்மையில் அவர்களுக்கு கருச்சிதைவு அல்லது கருக்கலைப்பு ஏற்பட்ட போதிலும் கொலைக்குற்றம் சுமத்தப்பட்டு, சிறையில் உள்ளதாக 'பெண்களை விடுதலை செய்' என்னும் தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் வெரோனிகா க்ரூஸ் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
 
இதில் 70 சதவீதத்திற்கு அதிகமானோருக்கு கருச்சிதைவு ஏற்பட்டது, ஆனால் அவர்கள் மீது கடுமையான தண்டனை வழங்கக்கூடிய குற்றமான, உறவினர்களைக் கொன்ற குற்றம் சுமத்தப்பட்டுள்ளது என அவர் விவரிக்கிறார்.
 
webdunia


மெக்ஸிக்கோ சிட்டி மட்டுமே கருக்கலைப்பை சட்டப்பூரவமானதாக கொண்ட மெக்ஸிக்கோ நகரம்
 
சில பெண்கள் அதிகபட்சமாக, 50 வருட சிறைத்தண்டனைப் பெற்றனர். ஆனால் கருக்கலைப்பிற்கான தண்டனை சற்று குறைவு; 5-8 வருடங்கள் சிறையில் இருக்க வேண்டும் அல்லது பிணையில் விடுதலை பெறலாம்.
 
சட்டரீதியான போராட்டம்:
 
2009 ஆம் ஆண்டிலிருந்து மெக்ஸிகோவில், காரணம் எதுவாக இருந்தாலும் கருக்கலைப்பு நடந்த பெண்கள் மீது குற்றம் சுமத்துவது அதிகரித்து வருகிறது என வெரோனிகா க்ரூஸ் தெரிவித்துள்ளார்.
 
கருத்தறித்த அந்த நொடியிலிருந்து மனித உயிரைக் காப்பாற்ற, அந்த வருடம், மெக்ஸிக்கோவில் உள்ள 32 மாநில சட்டமன்றங்களில் 16 சட்டமன்றங்கள், தங்களது அரசியல் அமைப்புகளில் மாற்றங்களை கொண்டு வந்தன.
 
கருவுற்ற 12 மாதங்களில் கருக்கலைப்புச் செய்வது குற்றச் செயல் அல்ல என மெக்ஸிகோ நகரம் அறிவித்த பிறகு இவ்வாறான அறிவிப்பு ஏற்பட்டது.
 
மெக்ஸிக்கோவின் மற்ற மாநிலங்களில் அல்லது நாடு முழுவதுமாக இக்குற்றம் நடைபெறக் கூடாது என இந்த சட்டரீதியான மாற்றம் ஏற்பட்டது.
 
சமூகத்தின் நியாயமற்ற கருத்துக்கள்:
 
சிறையில் அடைப்பதும் விசாரணை நடத்துவதும் ஒரு பக்கம் இருந்தாலும் கருக்கலைப்பு குற்றம் சுமத்தப்பட்ட பெண்கள் சமூகத்தால் பலதரப்பட்ட நியாயமற்ற கருத்துக்களுக்கும், குற்றச்சாட்டுகளுக்கும் உள்ளாகிறார்கள்.
 
சிறையில், தான் ஒரு கொலைகாரி என்றும் தனது சொந்த மகனையே கொன்று விட்டதாகவும், நாய்கள் கூட அவ்வாறு செய்யாது போன்ற பேச்சுக்களுக்கு தான் ஆளானதாக சுசானா தெரிவிக்கிறார்.
 
சிறையிலிருந்து விடுதலையாவதால் மட்டும் இம்மாதிரியான பேச்சுக்களில் இருந்து தப்பிக்க முடியாது, சமூகம் தொடர்ந்து தன் மீது குற்றம் சுமத்திக் கொண்டுதான் இருக்கும் எனவும் தான் அதிலிருந்து கடந்து போக வேண்டும் என சுசானா தெரிவிக்கிறார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உலகின் 3-வது பெரும் பணக்காரர் அமேஸான் தலைவர்