Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மலேரியா ஒட்டுண்ணிகள் மருந்துகளுக்கு கட்டுப்படாத நிலை

மலேரியா ஒட்டுண்ணிகள் மருந்துகளுக்கு கட்டுப்படாத நிலை
, வெள்ளி, 1 ஆகஸ்ட் 2014 (07:29 IST)
மருந்துகளுக்குக் கட்டுப்படாத மலேரியா ஒட்டுண்ணிகள் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் எல்லைகளுக்குப் பரவி, இந்த நோயைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுவரும் முயற்சிகளுக்கு அச்சுறுத்தலைத் தோற்றுவித்திருக்கின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்திருக்கின்றனர்.

கம்போடியா, பர்மா ,தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் சுமார் 1,000 நோயாளிகளுக்கும் மேற்பட்டோர் மீது நடத்தப்பட்ட ஆய்வுகள் , மலேரிய எதிர்ப்பு மருந்துகளில் மிகவும் சக்தி வாய்ந்த மருந்தான, ஆர்டெமிஸ்னின் என்ற மருந்தால்கூட கொல்லப்பட முடியாத அளவுக்கு ஒட்டுண்ணிகள் வளர்ந்திருப்பதைக் காட்டின.
 
இந்த ஒட்டுண்ணிகள் மருந்துகளுக்கு எதிராக பலம்பெறுவது , ஆசியா மற்றும் ஆப்ரிக்கா ஊடாகப் பரவுவதைத் தடுக்க , நோய் தோன்றிய ஆரம்ப கட்டத்தில் மலேரியா எதிர்ப்பு சிகிச்சைக் காலத்தை இரட்டிப்பாக்குவது ஒரு வழியாக இருக்கலாம், ஆனால் இதற்கு உள்ள கால அவகாசம் மிகவும் குறுகியது என்று "நியூ இங்கிலாந்து மருத்துவ சஞ்சிகை"யில் பிரசுரிக்கப்பட்ட இந்த ஆய்வு கூறுகிறது.
 
ஆப்ரிக்க கண்டத்தில் மட்டும்,ஒவ்வொரு ஆண்டும் பல லட்சக்கணக்கானோர் மலேரியாவால் கொல்லப்படுகின்றனர்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil