இந்தியத் தலைநகர் டெல்லியில் 14 வயது சிறுமி ஒருவர் ஒரே நபரால், இரண்டாவது முறையாக பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டதால் உயிரிழந்தார்.
ஏற்கெனவே, 8 மாதங்களுக்கு முன் அந்த சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியதால் கிரிமினல் குற்றச்சாட்டுக்கு ஆளானார்.
முதலாவது சம்பவம் தொடர்பாக, கடந்த மே மாதம் வழக்கு விசாரணை துவங்குவதற்கு சில நாட்களுக்கு முன்னதாக அந்தப் பெண் மீண்டும் அதே நபரால் கடத்தப்பட்டார்.
ஒரு வார காலமாக அந்தப் பெண்ணை தனி அறையில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக, பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், அந்தப் பெண்ணை ஆசிட் குடிக்க வைத்ததாகவும் தெரிவித்துள்ளனர். உள் காயங்கள் ஏற்பட்டதன் விளைவாக அவர் உயிரிழந்துள்ளார்.
இந்த வழக்கை போலிசார் கையாளும் விதம் குறித்து பெண்கள் குழுக்கள் விமர்சித்துள்ளனர்.