Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இணையதளத்தில் மிகவும் பிரபலமான லில் பாப் என்கிற பூனை இறந்தது.

இணையதளத்தில் மிகவும் பிரபலமான லில் பாப் என்கிற பூனை இறந்தது.
, செவ்வாய், 3 டிசம்பர் 2019 (21:56 IST)
சமூக வலை தளத்தில் இந்தப் பூனையை பின்தொடரும் பல மில்லியன் பேருக்கு, இதன் இறப்பு செய்தியை இந்தப் பூனையின் சொந்தகாரர் மைக் பிரிடாவ்ஸ்கி திங்கள்கிழமை அறிவித்தார்.
குமிழ் வடிவான கண்கள், எப்போதும் முன்னே நீட்டி இருக்கும் நாக்கு என வழக்கத்திற்கு மாறான தோற்றத்தை கொண்டிருந்ததால் லில் பாப் பூனை மிகவும் பிரபலமானது.
 
காட்டு பூனைக்குட்டியாக மீட்கப்பட்ட இந்த லில் பாப், வளர்ச்சிக்குறைவு நோய் (குள்ளத்தன்மை) உள்பட பல உடல்நல பிரச்சனைகளோடு பிறந்திருந்தது.
 
லில் பாப் பூனை வாழ்ந்தபோது, விலங்குகளுக்கு சேவை செய்வதற்கு ஏழு லட்சத்திற்கு அதிகமான டாலர் நிதி திரட்டுவதற்கு உதவியது என்று மைக் பிரிடாவ்ஸ்கி கூறினார்.
 
உலக விலங்குகளின் நலத்திலும், உலக நாடுகளிலுள்ள மில்லியன்கணக்கான மக்களிடமும் லில் பாப் பூனை பெரிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளதாக இன்ஸ்டாகிராம் பதிவு குறிப்பிடுகிறது,
 
தனித்தன்மையான தோற்றத்தால் ஆன்லைனில் லில் பாப் பிரபலமடைந்தது, லில் பாப்-பின் வளர்ச்சிக்குறைவு நோயால், வாழ்க்கை முழுவதும் பூனைக்குட்டியை போலவே வாழ்ந்து வந்தது.
 
பூனையின் சொந்தக்காரர் பிரிடாஸ்கி
 
இயற்கைக்கு அப்பாற்பட்டு அதிகமான கை அல்லது கால் விரல்கள் கொண்டதாக இந்த பூனை இருந்தது. ஒவ்வொரு பாதத்திலும், ஒரு விரல் கூடுதலாகவும், சரியான வளர்ச்சியுறாத தாடையையும், பற்கள் இல்லாததால் நாக்கு வெளியே நீட்டி கொண்டு இந்த பூனை இருந்தது.
 
இந்தியானா மாநிலத்தில் நாற்காலி கூடாரம் ஒன்றில் வேண்டாம் என்று ஒதுக்கப்பட்டிருந்த பூனைக்குட்டிகளில் இருந்து லில் பாப்-யை பிரிடாஸ்கி எடுத்து வளர்த்தார்.
 
அவர் அளித்த பேட்டி ஒன்றில் "இயற்கையின் மகிழ்ச்சியான விபத்து" என்று இந்த பூனையை பற்றி குறிப்பிட்டு, பல்வேறு உடல்நல சிக்கல்கள் இருந்தாலும், இந்த பூனை மகிழ்ச்சியாக, சுகாதாரமாக வாழ்ந்ததாக தெரிவித்தார்.
 
2011ம் ஆண்டு "டம்லர்" வலைப்பூவை உருவாக்கிய பிரிடாஸ்கி, இந்தப் பூனையின் புகைப்படங்களை அதில் பகிர்ந்தார். டெட்டிட் இணையதளத்தின் முதல் பக்கத்தில் இடம்பெறும் அளவுக்கு இந்தப் பூனை விவாதங்களை ஏற்படுத்தியது.
 
அதிக கவனம் பெற்றதால் இந்தப் பூனை பற்றி அதிக கட்டுரைகள் எழுதப்பட்டன. அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க அழைப்புகளும் விடுக்கப்பட்டன.
 
பத்திர ஒப்பந்தங்களையும், வணிக ஒப்பந்தங்களையும் பெற்ற இந்த பூனை, யு டியூப் நிகழ்ச்சிகள் மற்றும் ஆவணப்பட தொடர்களையும் உருவாக்க காரணமாகியது.
 
இதன் நட்சத்திர பிரபலத்தை கொண்டு, பிரிடாஸ்கி அமெரிக்க விலங்கு வதை தடுப்பு நிறுவனம் மூலம் ஊனமுற்ற பிற பூனைகளுக்கு உதவுவது உள்பட தொண்டு நிறுவனத்திற்கு நிதி திரட்டினார்.
 
இறப்புக்கு முன்னர் இந்தப் பூனை எலும்பு நோய் தொற்றால் துன்பப்பட்டு வந்தது. இதன் உடல் நலம் பற்றிய தகவல்களை 24 லட்சம் பேர் பின்தொடர்ந்த இதன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரிடாஸ்கி பகிர்ந்து வந்தார்.
 
ஃபேஸ்புக்கில் இந்தப் பூனையை 30 லட்சம் பேருக்கு மேலானோர் பின்தொடர்ந்தனர்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியாவின் பொருளாதாரத்தை கடவுள் தான் காப்பாற்றனும் - ப. சிதம்பரம் ’டுவீட்’