ஆக்கஸ் ஒப்பந்தம் போடும்போது பிரான்ஸ் விஷயத்தில் சொதப்பிவிட்டோம்: பைடன்

Webdunia
சனி, 30 அக்டோபர் 2021 (13:36 IST)
ஆக்கஸ் பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மக்ரோங்கிடம் நீண்ட நாட்களுக்குப் பிறகு பேசியுள்ளார்.
 
ஆக்கஸ் பாதுகாப்பு உடன்பாடு ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு இடையே செய்து கொள்ளப்பட்டது. இதன்கீழ் நீர்முழ்கி தொடர்பான பல்வேறு வகையான தொழில்நுட்பங்களை ஆஸ்திரேலியாவுக்கு அமெரிக்காவும், பிரிட்டனும் வழங்க இருக்கின்றன.
 
முதல் முறையாக அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களும் ஆஸ்திரேலியாவுக்குக் கிடைக்கவிருக்கின்றன. பல பில்லியன் டாலர் மதிப்பிலான நீர்மூழ்கிக் கப்பல்களைக் கட்ட ஏற்கெனவே பிரான்ஸ் நாட்டுடன் ஆஸ்திரேலியா ஒப்பந்தம் போட்டிருந்தது.
 
ஆக்கஸ் உடன்பாடு கையெழுத்தானதால், பிரான்ஸ் நாட்டுடனான உடன்பாடு முறித்துக் கொள்ளப்பட்டது. இதனால் பிரான்ஸுக்கு 37 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஆஸ்திரேலிய நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தம் கைவிட்டு போனது.
 
இரு நாட்டு தலைவர்களும் ரோம் நகரில் உள்ள வாடிகன் தூதரகத்தில் சந்தித்துக் கொண்டனர். “நாங்கள் செய்தது சொதப்பல் தான்” என பைடன் கூறினார். “உண்மையில் இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பே, பிரான்ஸ் நாட்டுக்கு இந்த ஒப்பந்தம் குறித்து நீண்ட காலத்துக்கு முன்பே தெரியப்படுத்தப்பட்டதாகத்தான் நான் கருதி வந்தேன்.” என கூறினார் பைடன்.
 
ஆக்கஸ் ஒப்பந்தம் செயற்கை நுண்னறிவு போன்ற பல முன்னணி தொழில்நுட்பங்களைக் உள்ளடக்கிய, ஆஸ்திரேலியாவின் மிகப் பெரிய பாதுகாப்பு உடன்படிக்கை. இந்த உடன்படிக்கை சீனாவை எதிர்கொள்ள எடுக்கப்பட்ட நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. சந்திப்புக்குப் பிறகு பத்திரிகையாளர்களைச் சந்தித்த மக்ரோங் “நம்பிக்கை என்பது அன்பு போன்றது, அதை அறிவிப்பது நல்லது தான், ஆனால் அதற்கான ஆதாரம் கிடைத்தால் இன்னும் நன்றாக இருக்கும்” என்று கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குறிவைத்தால் தவற மாட்டேன்; தவறினால் குறியே வைக்க மாட்டேன்.. எம்ஜிஆர் பஞ்ச் டயலாக்கை பேசிய விஜய்..!

4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

சென்னையின் முக்கிய திட்டத்திற்கு ரூ.200 கோடி கொடுத்த ஸ்ரீ சத்ய சாயி பாபா அறக்கட்டளை..!

தெற்கு வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு: 48 மணி நேரத்தில் தீவிரமடையும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி

அடுத்த கட்டுரையில்
Show comments