Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட்: பிரதமரின் பேச்சை கேட்காத பாகிஸ்தான் கேப்டன் சர்ஃபராஸ்

Webdunia
திங்கள், 17 ஜூன் 2019 (19:28 IST)
ஞாயிற்றுக்கிழமை அன்று மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிரஃபோர்ட் மைதனாத்தில் நடைபெற்ற இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான உலகக் கோப்பை போட்டியில் இந்தியா 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.


 
இந்த போட்டிக்கு முன்பு ஜூன் 15 ஆம் தேதி ட்விட்டரில் பாகிஸ்தான் பிரதமரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான் பாகிஸ்தான் அணிக்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
 
நேற்று முதல் இன்னிங்ஸின் 46 ஓவர் வரை மழை இல்லாமல் இருந்ததால் இந்தியா தொடர்ந்து ஆடி 336 ரன்களுக்கு எடுத்தது. அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் தொடக்கத்திலிருந்து சரியாக ஆடவில்லை என்றாலும் 36 ஓவருக்கு 166 ரன்கள் எடுத்திருந்தது.
 
இந்தியா - பாகிஸ்தான் ரசிகர்களின் மனங்களை இணைத்த மழை
உலகக்கோப்பையை இந்தியா வெல்ல ரோகித் சர்மா காரணமாக அமைவாரா?
மழை காரணமாக இரண்டாம் இன்னிங்ஸ் இருமுறை பாதிக்கப்பட்டதால் ஆட்டம் 40 ஓவராக குறைக்கப்பட்டது; அதன்பின் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி இந்தியா 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
 
இந்நிலையில், நடந்து முடிந்த இந்தியா பாகிஸ்தான் இடையேயான ஆட்டத்தை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா "இன்னொரு ஸ்ட்ரைக்கிலும் இந்தியா வென்றது" என ட்வீட் செய்துள்ளார்.
 
பொதுவாக இந்தியா பாகிஸ்தான் போட்டி என்றாலே பரப்புக்கு பஞ்சம் இருக்காது. அதுவும் இது உலகக் கோப்பை போட்டி. எனவே போட்டிக்கு முன்னதாக இருநாட்டு ரசிகர்களும் தங்கள் அணியே வெல்ல வேண்டும் என தீவிரமாக இருந்தனர்.
 
ஆனால் விளையாட்டை விளையாட்டாக மட்டுமே பார்க்க வேண்டும் என்ற ஒரு கருத்தும் சமூக வலைதங்களில் பிரதானமாக ஒலித்தது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments