Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அதிபர் கொலையில் பிரதமருக்குத் தொடர்பா? தொலைபேசி அழைப்புகளால் சிக்கல்

Advertiesment
அதிபர் கொலையில் பிரதமருக்குத் தொடர்பா? தொலைபேசி அழைப்புகளால் சிக்கல்
, புதன், 15 செப்டம்பர் 2021 (13:33 IST)
ஹைதி அதிபர் கொலை செய்யப்பட்டதில் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதால் அந்நாட்டுப் பிரதமர் ஏரியல் ஹென்றி நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
அதிபர் கொலை செய்யப்படுவதற்கு முன்னதாக கொலையில் சந்தேகிக்கப்படும் நபருடன் பிரதமர் ஹென்றி பல முறை பேசியிருப்பது கண்டறியப்பட்டது. கடந்த ஜூலை 7-ஆம் தேதி ஹைதி அதிபர் ஜோவனெல் மோய்ஸ் கொல்லப்பட்டார். தலைநகரின் புற நகரப் பகுதியில் உள்ள அவரது வீட்டில் துப்பாக்கி குண்டுகள் துளைக்கப்பட்ட நிலையில் அவரது உடல் கிடந்தது.
 
இந்தக் கொலை வழக்கில் அரசுத் தரப்பு வழக்கறிஞரான ஜோசப் ஃபெட்போர்ட் கிளாடை நீக்குவதாக பிரதமர் ஹென்றி திங்கள்கிழமையன்று அறிவித்தார். வேறொருவரை அந்தப் பதவியில் நியமித்தார்.
 
ஆனால் தனது பதவியில் நீடித்திருப்பதாக கிளாட் கூறியிருக்கிறார். வழக்கை விசாரிக்கும் நீதிபதியிடம் கொலையில் பிரதமருக்குத் தொடர்பு இருப்பதாகக் குற்றச்சாட்டு பதிவு செய்யும்படியும் அவர் கேட்டுக் கொண்டார்.
 
இதனிடையே கிளாடுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கும்படி நீதித்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். கொலையில் சந்தேகிக்கப்படும் பேடியோ என்பவரது செல்போனின் சம்பவம் நடந்த இடத்துக்கு அருகில் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. கொலை நடந்த பிறகு அவர் பிரதமர் ஹென்றியுடன இரண்டு முறை போனில் பேசியிருப்பதற்கான ஆவணங்களும் கிடைத்திருக்கின்றன.
 
கொலையில் தொடர்புடையதாகக் சந்தேகிக்கப்படும் பேடியோ, நீதித்துறை அமைச்சகத்தைச் சேர்ந்த அதிகாரி. தன்மீதான குற்றச்சாட்டுகளை பிரதமர் ஹென்றி தொடர்ந்து மறுத்து வருகிறார். நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சி இது என்று கூறி வருகிறார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிமுக கூட்டணியில் பாமக தொடரும் !