Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

புனிதரின் உடலைப் பார்க்க கோவாவில் குவியும் பக்தர்கள்

Advertiesment
Goa
, ஞாயிறு, 23 நவம்பர் 2014 (19:11 IST)
மேற்கிந்திய மாநிலமான கோவாவில் குழந்தை இயேசு பேராலயத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும் புனிதர் ஃப்ரான்சிஸ் சேவியரின் உடலைப் பார்க்க ஆயிரக்கணக்கான கத்தோலிக்கர்கள் குவிந்துவருகின்றனர்.


 
16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஸ்பானிஷ் மதப் பிரச்சாரகரான ஃப்ரான்சிஸ் சேவியரின் உடல், வெள்ளிப் பேழை ஒன்றில் இந்த பேராலயத்தில் பாதுகாக்கப்பட்டுவருகிறது.
 
பத்தாண்டுகளுக்கு ஒரு முறை, பொதுமக்களின் பார்வைக்காக இந்த உடல் வைக்கப்படும்.
 
புனிதரின் உடலைப் பார்ப்பதற்காக, வரும் வாரங்களில் ஆயிரக் கணக்கானவர்கள் இந்த தேவாலயத்திற்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
சனிக்கிழமையன்று திருப்பலி பூஜைகளை ஆர்க்பிஷப்புகள் நடத்தினர். அதற்குப் பிறகு, பலத்த பாதுகாப்புடன் ஊர்வலம் துவங்கியதும், பேழையை முத்தமிட ஆயிரக்கணக்கானர்கள் வரிசையில் குவிந்தனர்.
 
புனிதரின் உடலைப் பார்ப்பதற்காக அமெரிக்காவிலிருந்து வந்திருந்த ப்ரூக் ஹரோட்ஸ், “உண்மையிலேயே இன்று இங்கு ஒரு சக்தி இருப்பதை உணர முடிகின்றது” என்று குறிப்பிட்டார்.
 
ஆரம்பகால மதப் பிரச்சாரகர்களில் ஒருவரான ஃப்ரான்சிஸ் சேவியர், ஆசியாவில் தீவிரமாகப் பணியாற்றியவர். அந்த காலகட்டத்தில் போர்ச்சுக்கீசிய ஆதிக்கத்தின் கீழ் இருந்த பகுதிகளில் இவர் பணியாற்றினார்.
 
இவர் இறந்து 70 ஆண்டுகளுக்குப் பின்னர், இவருக்குப் புனிதர் பட்டம் வழங்கப்பட்டது.
 
கோவாவில் வரும் ஜனவரி 4ஆம் தேதிவரை புனிதரின் உடலைப் பார்க்கலாம்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil