Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

'ஒட்டகச்சிவிங்கிகள் ஒரே இனத்தைச் சேர்ந்தவை அல்ல'

'ஒட்டகச்சிவிங்கிகள் ஒரே இனத்தைச் சேர்ந்தவை அல்ல'
, வெள்ளி, 9 செப்டம்பர் 2016 (00:45 IST)
ஆப்ரிக்காவின் புல்வெளிகளில் அலைந்து திரியும் ஒட்டகச்சிவிங்கிகள் ஒரே இனத்தைச் சேர்ந்தவை அல்ல, அவை நான்கு இனங்களைச் சேர்ந்தவை என புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
 

 
ஒட்டகச்சிவிங்கிகள் ஒரே இனத்தைச் சேர்ந்தவை, ஆனால் பல துணை இனங்களைச் சேர்ந்தவை என்றே இதுவரை அறியப்பட்டிருந்தன.
 
அவை பல லட்சம் ஆண்டுகளாக தமது இனத்துக்குளேயே இனப்பெருக்கம் செய்துள்ளதும், தமது மரபணுவை இதர துணை இனங்களுடன் பகிர்ந்துகொள்ளவில்லை என்பதும் அவற்றின் மரபணு பரிசோதனைகளில் தற்போது தெரியவந்துள்ளன.
 
தமது ஆய்வு முடிவுகள் இவை தனித்தனி இனங்களாவே உருவாகி வளர்ந்துள்ளன என்பதை தெளிவாக்கியுள்ளது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
 
உலகிலேயே மிகவும் உயரமான விலங்கினமான ஒட்டகச்சிவிங்கியைப் பற்றிய இந்த ஆய்வு முடிவு ஜர்னல் கரண்ட் பயாலஜி அறிவியல் பத்திரிகையில் வெளியாகியுள்ளது.
 
webdunia

ஒரு இனம் மற்றொன்றுடன் இனப்பெருக்கம் செய்வதில்லை
 
இந்த ஆய்வின் முடிவுகள் இனிவரும் காலங்களின் ஒட்டகச்சிவிங்கிகளைப் பாதுகாக்கும் நடவடிக்கையில் பெரிதும் உதவியாக இருக்கும் என தாங்கள் நம்புவதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
 
ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு ஒட்டகச்சிவிங்கிகள் இடம்பெயர்ந்து செல்லும்போது எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் மாற்றங்கள் குறித்த ஆய்வை மரபணு பரிசோதனையின் மூலம் முன்னெடுத்தபோதே இவை ஒரே இனத்தைச் சேர்ந்தவை அல்ல என்பது தெரியவந்துள்ளது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புகைபிடிப்பதால் ஏற்படும் மரணத்தை போல இதனாலும் 10 சதவீத இறப்பு....