ஜப்பானில் ஒரே ஒரு திராட்சைக் குலை 11,000 டாலர்கள் விலைக்கு விற்கப்பட்டிருக்கிறது.
இந்தக் குலையில் உள்ள ஒவ்வொரு திராட்சைப் பழமும் ஒரு கோல்ப் பந்து அளவு பெரியது
இந்த விலைப்படி இந்தக் குலையில் உள்ள தனி ஒரு திராட்சையின் சராசரி விலை 360 டாலர்கள்!
ரூபி ரோமன் வகையைச் சேர்ந்த இந்த திராட்சைகள் ஒரு பெரு வணிக நிறுவனம் ( சூப்பர்மார்க்கெட்) ஒன்றால் வாங்கப்பட்டன.
அந்தப் பழங்கள் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டிருக்கும். பிறகு, தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கப்படும்.
விலை உயர்ந்த பழ வகைகள் பொதுவாக பரிசுகளாக ஜப்பானில் தரப்படுகின்றன. இந்தப் பழவகைகள் அசாதாரண விலைகளுக்கு விற்கப்படுகின்றன.