Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண் விமான பயணிகள் ஆடையை கழற்றி சோதனை: மன்னிப்பு கேட்ட கத்தார்

Webdunia
புதன், 28 அக்டோபர் 2020 (14:28 IST)
கத்தாரில் உள்ள தோஹா விமான நிலையத்தில் 10 விமானங்களில் இருந்த பெண்களுக்கு , சமீபத்தில் குழந்தை பெற்றார்களா என ஆடையை கலைந்து மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது, பெரும் சர்ச்சையாகி இருக்கிறது.

இது தொடர்பாக பரிசோதனை செய்யப்பட்ட பெண்கள் வழங்கிய புகார்கள் குறித்து விசாரிக்கப்படும் என கத்தார் தெரிவித்துள்ளது.
 
அக்டோபர் 2ஆம் தேதி ஹமாத் விமான நிலைய குப்பைத்தொட்டியில் கைக்குழந்தை ஒன்று கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, அந்தக் குழந்தை யாருடையது என கண்டறியும் நோக்கத்தில், விமானத்தில் வந்த பெண்களை அழைத்து சென்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.
 
இவர்களில் பல நாட்டு பெண்களுடன் 18 ஆஸ்திரேலிய பெண்களும் இருந்ததாக ஆஸ்திரேலிய அரசாங்கம் கூறியுள்ளது.
 
இந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கோரியுள்ள கத்தார் அரசாங்கம், குப்பைத் தொட்டியில் கண்டெடுக்கப்பட்ட பெண் குழந்தை தோஹாவில் மருத்துவ பாதுகாப்பில் இருப்பதாக தெரிவித்துள்ளது.
 
அக்குழந்தை பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்டு குப்பைத் தொட்டியில் போடப்பட்டதாகவும், அதன் பெற்றோரை உடனடியாக கண்டறியும் நோக்கில் விமான  நிலையத்தில் இவ்வாறு நடந்ததாகவும் அந்நாட்டு அரசாங்கம் கூறியுள்ளது.
 
இதுபோன்ற மோசமான குற்றம் செய்த குற்றவாளிகள் தப்பிக்க கூடாது என்ற நோக்கத்தில் அப்படி ஒரு சோதனை நிகழ்ந்ததாகவும், இதனால் பயணிகளுக்கு  ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் தனி மனித சுதந்திரத்தை மீறியதற்கு வருத்தம் தெரிவித்து கொள்வதாகவும் கத்தார் நாட்டு அரசு வெளியிட்ட அறிக்கை  தெரிவிக்கிறது.
 
ஆஸ்திரேலியா என்ன கூறுகிறது?
 
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட ஆஸ்திரேலிய நாட்டு பெண்கள் அந்நாட்டு அரசு அதிகாரிகளை தொடர்பு கொண்ட பிறகே இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
 
இப்பெண்கள் ஆம்புலன்சுக்கு அழைத்து செல்லப்பட்டு அங்கு அவர்களது உள்ளாடையை நீக்கிய பிறகு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது
 
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பெண்கள், ஆஸ்திரேலிய அரசிடம் மருத்துவ ரீதியான உதவிகளைப் பெற்றதாக அதனை நேரில் பார்த்தவர் ஒருவர்  தெரவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments