Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அண்டார்டிகாவில் பனி உருகும் வேகம் இருமடங்கு அதிகரித்துள்ளது

அண்டார்டிகாவில் பனி உருகும் வேகம் இருமடங்கு அதிகரித்துள்ளது
, புதன், 21 மே 2014 (12:11 IST)
புவியின் தென் துருவத்திலுள்ள அண்டார்டிகா கண்டத்தின் பனிப் படலம் மொத்தத்தையும் மதிப்பீடு செய்துள்ள புதிய ஆய்வு ஒன்று, தற்போது ஒவ்வொரு ஆண்டும் 160 பில்லியனன் டன்கள் எடையளவுக்கு இக்கண்டம் பனிக்கட்டியை இழந்துவருகிறது என்று தெரிவித்துள்ளது.

நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்ததை விட தற்போது இரண்டு மடங்கு அதிகமான வேகத்தில் பனி உருகுவதாக தெரியவந்துள்ளது.
 
பனிப் படலத்தின் மாறும் வடிவத்தை கண்காணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ராடார் கருவியின் உதவியுடன் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் கிரியோசாட் செயற்கைக்கோள் இந்த ஆய்வை மேற்கொண்டது.
 
அண்டார்டிகாவில் இருக்கின்ற மொத்த பனியும் உருகினால் உலகத்தில் கடல் மட்டம் ஒரு மீட்டருக்கும் அதிகமாக உயர்ந்துவிடும் என அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாஸா அண்மையில் தெரிவித்திருந்தது.
 
மிக அதிகமாக பனி உருகி வரும் அண்டார்டிகாவின் மேற்குப் பகுதி குறித்தே விஞ்ஞானிகள் அதிக கவலை கொண்டுள்ளனர்.
 
ஒரு சில நூற்றாண்டுகளில் அங்குள்ள பனி மொத்தமும் உருகலாம் என அஞ்சப்படுகிறது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil