Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இலங்கையில் ஏற்பட்டுள்ள மருந்துகள் பற்றாக்குறை: நெருக்கடியைத் தணிக்கும் பரிந்துரைகள்

Advertiesment
Shortage of drugs
, வெள்ளி, 8 ஏப்ரல் 2022 (18:00 IST)
இலங்கையில் ஏற்பட்டுள்ள அத்தியாவசிய மருந்து வகைகளுக்கான தட்டுப்பாட்டைச் சரிசெய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சகத்தின் செயலாளர் சஞ்சீவ் முனிசிங்கிடம் அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.


மருந்து தொடர்பான நெருக்கடி நிலை அதிகரித்து வருவதால், இதில் உடனடி தலையீடு அவசியம் என அந்த சங்கம் வலியுறுத்தியுள்ளது.

மேலும், மருந்து பற்றாக்குறையினால் ஏற்பட்டுள்ள நெருக்கடியைத் தணிக்க சில பரிந்துரைகளையும் முன்வைத்துள்ளது. அதன்படி,

உற்பத்தி செயல்திட்டத்தை உருவாக்கும் நோக்கத்தில் இதோடு தொடர்புடைய அனைத்து பங்குதாரர்களையும் அவசர விவாதத்திற்குக் கூட்டுதல்.

கிடைக்கக்கூடிய மருந்துகள் மற்றும் நுகர்பொருட்களின் உகந்த பயன்பாட்டை உறுதி செய்வதற்கான வழிகாட்டுதலை உருவாக்க தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்ட ஒரு தொழில்நுட்பக் குழுவை நியமித்தல்.

அத்தியாவசிய மருந்துகள் மற்றும் நுகர்பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய தேசிய மற்றும் சர்வதேச ஆதரவைப் பெறுதல்.

மருந்துகள் மற்றும் நுகர்பொருட்களின் தரத்தை உறுதி செய்வதற்கான வழிமுறையை உருவாக்குதல்.

இதன்படி, நிலவும் தேசிய சுகாதார நெருக்கடிக்கு ஒரு நிலையான தீர்வைக் கொண்டு வர, மேலே உள்ள வழிகளில் நடவடிக்கை எடுக்குமாறு அந்த சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஏடிஎம்களில் அட்டைகள் இல்லாமல் பணம் எடுக்கலாம் - ரிசர்வ் வங்கி