மனித மொழியை நாய்கள் குறிப்பிட்ட அளவிற்கு புரிந்துக் கொள்ளும் என்று நாய்கள் மீது விருப்பம் கொண்டவர்கள் தொடர்ந்து தெரிவித்திருந்த கருத்திற்கு ஆதாரத்தை கண்டறிந்துள்ளனர் ஹங்கேரி ஆய்வாளர்கள்.
மனிதர்களைப் போன்றே நாய்களும் தங்கள் மூளையின் இடப்புறத்தை வார்த்தைகளை செயல்முறைப் படுத்த பயன்படுத்துகிறது என்றும், வார்த்தைகளின் ஓசையை வலப்புற மூளையை பயன்படுத்தியும் புரிந்துக் கொள்கிறது என்றும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
சோதனையில், உரக்கமாக வார்த்தைகளை கூறும் போது நாய்கள் நன்றாக எதிர்வினை அளித்தன என்றும்; மாறாக மென்மையாக வார்த்தைகளைப் பயன்படுத்தும் போது அவை மந்தமாகவே எதிர்வினை காட்டியன என்றும் தெரியவந்துள்ளது.
மனித மொழிகள் எவ்வாறு உருப்பெற்றன என்ற ஆராய்ச்சிக்கு, தங்களது ஆராய்ச்சி முடிவுகளும் உதவும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.