Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பஞ்சாபின் சிறிய கிராமத்தில் இருந்து டோக்யோ வரை – கமல்ப்ரீதின் பயணம்

Webdunia
சனி, 31 ஜூலை 2021 (14:38 IST)
டோக்யோ ஒலிம்பிக்கில் வட்டு எறிதல் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார் 25 வயதான கமல்ப்ரீத் கவுர். 

 
பஞ்சாபில் உள்ள சிறிய கிராமத்தை சேர்ந்த இவர், சமீபத்தில் தனது சொந்த தேசிய சாதனையை முறியடித்தார். பதக்கம் வென்ற பிறகு, பலரும் என்னை தொலைபேசி மூலம் அழைத்து வாழ்த்துவார்கள், ஆனால், வட்டு எறிதல் என்றால் என்னவென்றும் கேட்பார்கள்.
ஒலிம்பிக் போட்டிக்கு செல்வதற்கு முன் பிபிசி செய்தியாளர் வன்தனா அவரிடம் அவரது விளையாட்டு குறித்தும் ஒலிம்பிக் குறித்தும் பேசினார்.
 
உங்கள் மனதில் என்ன ஓடுகிறது?
 
என் குறிக்கோள் நன்றாக விளையாட வேண்டும் என்பதும் பதக்கம் வெல்வதும் மட்டுமே. அதன் பிறகு கடவுள் செயல். 
 
இளைஞர்களுக்கு கிரிக்கெட் குறித்து தெரியும். ஒரு சிலருக்கு மட்டுமே உங்கள் விளையாட்டு குறித்து தெரியும். பலரும் தெரிந்து கொள்ள வட்டு எறிதல் பற்றி கூறுகிறீர்களா?
 
அனைவருக்கும் கிரிக்கெட் பற்றி தெரிந்திருக்கிறது. ஆனால் யாருக்கு வட்டு எறிதல் குறித்து தெரியவில்லை. இன்றும் என்னிடம் பேசும்போது, வட்டு எறிதல் என்றால் என்னவென்று கேட்கிறார்கள்? எப்படி விளையாடுவீர்கள் என்கிறார்கள். அது ஒரு சக்கரம் போன்றது. நீங்கள் அதை எவ்வளவு தூரத்திற்கு முடியுமோ அவ்வளவு தூரம் எறிய வேண்டும்.
 
உங்களுக்கு கிரிக்கெட் பிடிக்கும் என்று கேள்விப்பட்டோம்?
 
எதிர்காலத்தில் எனக்கு நேரம் இருந்தால், நான் கிரிக்கெட் விளையாடுவேன். கிரிக்கெட் எனக்கு பிடிக்கும். விளையாட்டுத்துறையை தேர்ந்தெடுத்த பின் ஆண்களை விட பெண்கள் அதிக சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

நீங்கள் சந்தித்த சவால்கள் என்னென்ன?
 
பெண் என்றால் அனைவருக்கும் வரும் முதல் சிந்தனை, திருமணம் தான். பெண் படிப்பை முடித்தவுடன் திருமணம் செய்து கொள்ள வேண்டும். அவர்கள் விளையாட்டை தேர்ந்தெடுக்க ஊக்குவிக்கப்படுவதில்லை. விளையாட்டால் உனக்கு என்ன கிடைக்கப் போகிறது என்றுதான் கேட்பார்கள். இதைதான் நான் என் வாழ்க்கையில் பார்த்துள்ளேன்.
 
நீங்கள் ஒரு சிறிய கிராமத்தில் இருந்து வருகிறீர்கள். எந்த மாதிரியான சிக்கல்களை சந்திக்க வேண்டியிருந்தது?
 
நான் விளையாட்டுத்துறையை தேர்ந்தெடுக்கப் போகிறேன் என்று கூறி என் குடும்பத்தை சமாதானப்படுத்துவதே என் பெரும் பிரச்னையாக இருந்தது. நான் படிக்க வேண்டும் என்று அவர்கள் நினைத்தார்கள். நான் உறுதியாக இருக்க, விளையாட்டை தேர்ந்தெடுக்க அனுமதித்தார்கள்.
 
எங்கள் பகுதியில் பயிற்சி மையங்கள் குறித்து எனக்கு தெரியாது. பயிற்சி எடுக்க எங்கு செல்ல வேண்டும் என்று தெரிந்து கொள்ளவே எனக்கு சில காலம் பிடித்தது. முன்கூட்டியே பயிற்சி கிடைத்திருந்தால், 2016 ஒலிம்பிக் போட்டியில் நான் கலந்து கொண்டிருப்பேன்.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments