Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

’காஸ்மிக் கிரிஸ்ப்' வருஷம் பூரா கெடாம இருக்கும் அறிய வகை ஆப்பிள்!!

’காஸ்மிக் கிரிஸ்ப்' வருஷம் பூரா கெடாம இருக்கும் அறிய வகை ஆப்பிள்!!
, திங்கள், 2 டிசம்பர் 2019 (13:34 IST)
சுமார் ஓராண்டுக்கு கெடாமல் இருக்கும் என்று கூறப்படும் ஒரு புதிய வகை ஆப்பிள் விற்பனைக்கு வந்துள்ளது.
 
குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால் சுமார் ஓராண்டுக்கு கெடாமல் இருக்கும் என்று கூறப்படும் ஒரு புதிய வகை ஆப்பிள் அமெரிக்காவில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த வகை ஆப்பிளை கண்டறிவதற்கு ஆராய்ச்சியாளர்களுக்கு இரு தசாப்தங்கள் ஆனதாக கூறப்படுகிறது.
 
'காஸ்மிக் கிரிஸ்ப்' என்று அழைக்கப்படும் இந்த புதிய வகை ஆப்பிளானது 'ஹனிகிரிஸ்ப்', 'எண்டர்ப்ரைஸ்' ஆகியவற்றின் கலப்பினமாகும். இது முதன் முதலில், 1997ஆம் ஆண்டு வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் பயிரிடப்பட்டது.
 
திடமான, மிருதுவான, சாறு நிறைந்த இந்த ஆப்பிளை கண்டறிந்து வணிகரீதியாக வெளியிடுவதற்கு சுமார் 72 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இந்த ஆப்பிளில் இனிப்பு, புளிப்பு ஆகிய இரு சுவைகளும் சமநிலையில் இருப்பதுடன், சாறு நிறைந்ததாகவும் உள்ளது.
இவற்றின் சிவப்பு நிற தோலின் மேல் படரும் வெள்ளை நிற புள்ளிகள், இரவுநேர வானத்தை பிரதிபலிப்பதால், இதற்கு 'காஸ்மிக் கிரிஸ்ப்' என்ற பெயர் வந்துள்ளது. 
 
இந்த வகை ஆப்பிளை சரியான முறையில் குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்தால், பறிக்கப்பட்டது முதல், 10-12 மாதங்களுக்கு தரமும், சுவையும் குறையாமல் வைத்திருந்து சாப்பிட முடியும். 

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மோடி தான் கடைக்கோடி தொண்டனுக்கும் இதயதெய்வம் - தமிழக பாஜக ’டுவீட்’