Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொரோனா வைரஸ்: லாமா விலங்கைப் பயன்படுத்தி புதிய இம்யூன் தெரபி

Advertiesment
கொரோனா வைரஸ்: லாமா விலங்கைப் பயன்படுத்தி புதிய இம்யூன் தெரபி
, சனி, 25 செப்டம்பர் 2021 (10:05 IST)
கொரோனா வைரஸ்: லாமா விலங்கைப் பயன்படுத்தி புதிய இம்யூன் தெரபி!கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ராடன்ட் உயிரினத்தின் மீது புதிய நானோபாடி நாசி ஸ்ப்ரே மூலம் சிகிச்சையளிக்கப்பட்ட போது, அது ஆறு நாட்களுக்குள் முழுமையாக குணமடைந்ததாக கூறினார் ஆக்ஸ்போர்ட்ஷையரில் உள்ள ரோசாலிண்ட் ஃபிராங்க்ளின் இன்ஸ்டிட்யூட்டின் முன்னணி ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான பேராசிரியர் நைஸ்மித்,
 
இந்த சிகிச்சை இதுவரை ஆய்வக விலங்குகளின் மீது மட்டுமே சோதிக்கப்பட்டது, ஆனால் பொது சுகாதார இங்கிலாந்து அமைப்போ, இதுவரை சோதித்த "மிகவும் பயனுள்ள SARS-CoV-2 நடுநிலைப்படுத்தும் மருந்துகளில் இதுவும் ஒன்று" என கூறியுள்ளது.
 
மனிதர்களின் ஆன்டிபாடிக்களைப் போலவே, வைரஸ் சார்ந்த நானோபாடிக்களும் நம் உடலில் படையெடுக்கும் வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களுடன் பிணைக்கப்படுகின்றன. உடலில் நுழையும் வைரஸை, உடலின் மற்ற நோயெதிர்ப்பு மண்டலமும் தாக்கி அழிக்க, இந்த பிணைப்பு தெளிவாக அடையாளம் காட்டுகிறது.
 
ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கிய நானோபாடிகள் - லாமாவின் நோய் எதிர்ப்பு சக்தியின் உதவியுடன் இறுக்கமாக பிணைக்கப்படுகின்றன.
 
"அந்த இடத்தில் தான் ஃபிஃபி என பெயரிடப்பட்ட லாமா உயிரினத்திடமிருந்து சில உதவிகளைப் பெற்றோம்" என்று பேராசிரியர் நைஸ்மித் விளக்கினார்.
webdunia
வைரஸ் புரதத்தின் ஒரு சிறிய, தொற்று அல்லாத துண்டுடன் ஃபிஃபிக்கு (Fifi) தடுப்பூசி செலுத்தியதன் மூலம், விஞ்ஞானிகள் அவ்விலங்கினத்தின் நோயெதிர்ப்பு மண்டலத்தை, சிறப்பு மூலக்கூறுகளை உருவாக்கத் தூண்டினர்.
 
விஞ்ஞானிகள் ஃபிஃபி (Fifi) இரத்த மாதிரியில் மிகவும் சக்திவாய்ந்த நானோபாடிகளை கவனமாக தேர்ந்தெடுத்து சுத்திகரித்தனர். ஒரு குறிப்பிட்ட பூட்டுக்கு மிகச் சரியாகப் பொருந்தும் சாவியைப் போல, வைரஸ் புரதத்துடன் மிக நெருக்கமாகப் பொருந்தியவை அவை.
 
அதன் பிறகு, இந்த குழுவால், சிறப்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட, மிகவும் சக்திவாய்ந்த மூலக்கூறுகளை அதிக அளவில் வளர்க்க முடிந்தது.
 
நோயெதிர்ப்பு அமைப்பு மிகவும் அற்புதமானது, அது நம்மால் முடிந்ததை விட இன்னும் சிறப்பாக செயல்படுகிறது - பரிணாம வளர்ச்சியை வெல்வது கடினம்." என்றார் பேராசிரியர் நைஸ்மித்.
 
மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு நிபுணர் பேராசிரியர் ஷீனா க்ரூய்சாங்க், புதிய வளர்ச்சி மிகுந்த உற்சாகம் அளிக்கிறது என்றும், இப்போதே மகிழ்ச்சி அடைவது முன்கூட்டி மகிழ்ச்சி கொள்வதாக இருக்கும்" என்று கூறினார்.
 
மேலும் "நாங்கள் மனித சோதனைகளுக்குச் செல்வதற்கு முன்பு செயல்திறன் மற்றும் பாதுகாப்பு குறித்த கூடுதல் தரவுகள் தேவை," என்று அவர் கூறினார்.
 
"இருப்பினும் இது மிகவும் நம்பிக்கைக்குரியது, அதை எல்லாம் விட இது மலிவானது, மருத்துவ ரீதியில் இதை ஒருவருக்குச் செலுத்துவது எளிதானது என்பது ஒரு நல்ல செய்தி. துரதிர்ஷ்டவசமாக, கொரோனா வைரஸ் இன்னும் சிறிது காலம் நம்மோடு இருக்கும், எனவே அதிக சிகிச்சைகள் தேவைப்படும்." என்கிறார் அவர்.
 
நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் சஞ்சிகையில் தங்கள் ஆராய்ச்சியை வெளியிட்ட பேராசிரியர் நைஸ்மித் மற்றும் அவரோடு இணைந்து இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டவர்கள், கொரோனா வைரஸ் தடுப்பூசிகளின் வெற்றியுடன், எதிர்காலத்தில் பயனுள்ள சிகிச்சைகள் இருப்பது மிகவும் முக்கியம் என்பதை ஒப்புக் கொண்டனர்.
 
"உலகம் முழுவதும் ஒரே வேகத்தில் தடுப்பூசி போடப்படுவதில்லை, மேலும் தடுப்பூசி நோய் எதிர்ப்பு சக்தியைத் தவிர்க்கும் புதிய மாறுபாடுகள் உருவாகும் அபாயம் உள்ளது" என்றும் அவர் கூறினார்.
 
ஃபிஃபி என்கிற பெயருடைய லாமா உயிரினத்திலிருந்து பெறப்பட்ட கோவிட் சிகிச்சை தொடர்பான ஆரம்ப கட்ட சோதனைகள் "குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை" காட்டியுள்ளது.
 
ஆன்டிபாடிக்களின் சிறிய, எளிமையான பதிப்புகளால் செய்யப்பட்ட ஒரு சிகிச்சை முறை தான் "நானோபாடிஸ்". இது லாமாக்கள் மற்றும் ஒட்டகங்கள் நோய்த்தொற்றுக்கு உள்ளாகும் போது, எதிர்வினையாக இயற்கையாக உற்பத்தி செய்கிறது.
 
இந்த சிகிச்சையை மனிதர்களில் பரிசோதித்த பின், இதை ஒரு எளிய நாசி துவாரம் வழி செலுத்தும் ஸ்ப்ரே வடிவில் கொடுக்கப்படலாம். இதைக் கொண்டு ஆரம்பகால தொற்றுநோயை குணப்படுத்தவும் தடுக்கவும் வாய்புள்ளது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
 
நானோபாடிகளை "அற்புதமான உற்சாகம்" என்று விவரிக்கிறார் பேராசிரியர் ஜேம்ஸ் நைஸ்மித்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வங்கக்கடலில் 'குலாப்' புயல்