Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கும் கருவியை உருவாக்கிய இஸ்ரேல்!!

Webdunia
திங்கள், 27 ஜூலை 2020 (14:51 IST)
கோவிட்-19 நோய்த்தொற்று பாதிப்பு ஒருவருக்கு ஏற்பட்டுள்ளதா இல்லையா என்பதை வெறும் 30 நொடிகளில் கண்டறியும் அதி நவீன கருவியொன்றை தயாரித்துள்ளதாக இஸ்ரேலை சேர்ந்த நிறுவனமொன்று தெரிவித்துள்ளது.
 
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளிலும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று வேகமாக பரவி வருகிறது. சில நாடுகளில் நோய்த்தொற்று பரவலின் இரண்டாம் அலை ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் மேலோங்குகிறது.
 
இந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அதிக அளவில் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட ஆலோசனைகளை தொடக்கம் முதலே உலக சுகாதார நிறுவனம் வழங்கி வருகிறது.
 
இருப்பினும், பரிசோதனை கருவிகளின் உற்பத்தி, விலை, விநியோகம் உள்ளிட்ட காரணங்களால் இன்னமும் பல்வேறு நாடுகளில் அவற்றுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான், இஸ்ரேலை சேர்ந்த நானோசென்ட் என்னும் தனியார் நிறுவனம் ஒருவரது மூச்சை மட்டுமே அடிப்படையாக கொண்டு கோவிட்-19 நோய்த்தொற்றை கண்டறியும் கருவியை உருவாக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.
 
இஸ்ரேலில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இந்த கருவி 85 சதவீதம் சரியான முடிவுகளை அளிப்பது தெரியவந்துள்ளதாகவும், கொரோனாவுக்கு எதிரான களப்பணியில் "முன்னணியில் செயல்படும்" என்று எதிர்பார்க்கப்படும் இந்த கருவிக்கு அடுத்த சில மாதங்களில் ஒப்புதல் கிடைக்குமென்றும் அந்த நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
 
இந்த கருவியை கொண்டு ஒருவருக்கு பரிசோதனை செய்ய சராசரியாக 700 ரூபாய் செலவாகும் என்று நானோசென்ட் கூறுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி, அமித்ஷாவை சந்திக்கும் ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார், தேவேந்திர பட்னாவிஸ்.. யார் முதல்வர்?

நெல்லையை அடுத்து மதுரையில்.. அதிமுக ஆய்வுக்குழு கூட்டத்தில் அடிதடி..!

சென்னை உள்பட 9 துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை..!

தமிழகத்தை மூன்றாக பிரிக்க வேண்டும்.. அர்ஜூன் சம்பத் பேச்சு

வானத்திற்கும் பூமிக்கும் முழங்கிய ஸ்டாலின் ஆட்சியில் காவல் நிலைய மரணங்கள்: என்ன பதில்? ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments