Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கொரோனா வைரஸ் தொற்றை தடுக்குமா கோமியம்?

கொரோனா வைரஸ் தொற்றை தடுக்குமா கோமியம்?
, வியாழன், 19 மார்ச் 2020 (18:51 IST)
இந்தியாவில் கொரோனா தொற்று குறித்து பல விழிப்புணர்வு செய்திகள் பிரசாரம் செய்யப்பட்டு வந்தாலும், ஒரு பக்கம் பல தவறான செய்திகளும் வலம் வந்து கொண்டிருக்கின்றன.

அதில் சிலவற்றை பிபிசியின் உண்மை பரிசோதிக்கும் குழு சரி பார்த்தது.

கோமியம் மற்றும் சாணம்

இந்தியாவில் பலகாலமாக கோமியம் மற்றும் மாட்டுச்சாணம் பல்வேறு நோய்களுக்கு தீர்வாக பேசி வருகிறார்கள்.

ஆளும் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த எம்.பியான சுமன் ஹரிபிரியா மாட்டுச் சாணத்தை கொரோனா வைரஸ் தொற்றுக்கான மருந்தாகப் பயன்படுத்தலாம் என தெரிவித்தார்.

இதற்கு முன்பு கோமியத்தில் பாக்ட்ரீயாவை எதிர்க்கும் குணங்கள் இருப்பதாக பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இந்து தேசியவாத குழு ஒன்று தலைநகர் டெல்லியில், கோமியம் குடிக்கும் நிகழ்ச்சி ஒன்றை ஒருங்கிணைத்தது.

"கோமியத்தில் வைரஸுக்கு எதிரான அம்சங்கள் இருப்பது இதுவரை நிரூபிக்கப்படவில்லை," என இந்திய வைராலஜி சொசைட்டியை சேர்ந்த ஷைலேந்திர சக்ஸேனா பிபிசியிடம் தெரிவித்தார்.

"மேலும் பசுவின் சாணத்தை பயன்படுத்துவது எதிர்மறையாக முடியலாம். ஏனென்றால் கொரோனா வைரஸ் பசுவின் சாணத்தில் இருக்கலாம்," என்றும் அவர் தெரிவித்தார்.

ஆல்கஹால் இல்லாத சானிடைஸர்கள்

கெளபதி என்னும் நிறுவனம், மாட்டுச்சாணி சோப்பு மற்றும் அல்கஹால் அற்ற சுத்தூரிக்கப்பட்ட கோமியத்தால் ஆன ஹாண்ட் சானிடைசர்களை கடந்த 2018ஆம் ஆண்டிலிருந்து விற்பனை செய்து வருகிறது.

ஆனால் தற்போது அது விற்றுத் தீர்ந்துவிட்டதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த பொருளின் தேவை அதிகம் இருப்பதால் ஒரு வாடிக்கையாளர் எத்தனை முறை இதனை வாங்கலாம் என்ற கட்டுப்பாட்டை கொண்டு வருகிறோம். அதன்மூலம் எங்கள் பொருள் பல வாடிக்கையாளர்களை சென்றடையும். என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதே சமயம் யோகா குரு பாபா ராம்தேவ், ஹிந்தி செய்தி சேனல்களில், வீட்டிலேயே மூலிகை `ஹாண்ட் சானிடைசர்`களை செய்ய முடியும் என தெரிவித்துள்ளார்.

அமிர்தவல்லி இலை, மஞ்சள் மற்றும் துளசி ஆகியவை கொரோனா தொற்றை தடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார நிறுவனம் மற்றும் அமெரிக்காவின் நோய்க்கட்டுபாடு மற்றும் தடுப்பு மையம் அல்கஹால் கொண்ட `ஹாண்ட் சானிடைசர்`கள் பயன்படுத்துவது முக்கியம் என தெரிவித்துள்ளது.

லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜின் மற்றும் ட்ராபிக்கல் மெடிசனை சேர்ந்த பேராசிரியர் சாலி ப்ளூம்ஃபீல்ட், வீட்டில் "செய்யும் ஹாண்ட் சானிடைசர்களால் எந்த பயனும் இல்லை.வோட்காவில் கூட 40 சதவீதம் ஆல்கஹால் உள்ளது," என்கிறார்.

அசைவத்தை தவிர்ப்பது

கடந்த வாரம் ஹரியாணாவின் சுகாதார அமைச்சர் அணில் விஜ், மக்கள் இறைச்சி உண்ண வேண்டாம் என்று கூறினார்.
"சைவம் சாப்பிடுபவர்களாக இருங்கள்" என டிவிட்டரில் தெரிவித்திருந்தார் அவர்.

விலங்குகளின் இறைச்சியை உண்டு மனித குலத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் கொரோனா வைரஸ் போன்ற வைரஸ்களை உருவாக்காதீர்கள் என்று அவர் கூறினார்.
 
மேலும் இறைச்சி உண்பவர்களை தண்டிக்கவே கொரோனா வைரஸ் வந்துள்ளது என இந்து தேசியவாத குழு ஒன்று தெரிவித்தது.
 
ஆனால் இந்திய அரசு இது தவறான கூற்று என தெரிவித்திருந்தது.
மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் இந்திய உணவு ஒழுங்குக் கட்டுபாட்டு அமைப்பு இதற்கான எந்த ஒரு ஆதாரத்தையும் கண்டறியவில்லை என தெரிவித்தார்.

கொரோனாவை தடுக்கும் மெத்தைகள்

இந்த கொரோனா தொற்று சில வர்த்தகங்களையும் உருவாக்கியுள்ளது. 15,000 ரூபாய் மதிப்பிலான கொரோனா தொற்றை தடுக்கும் மெத்தைகள் விளம்பரப்படுத்தப்பட்டன.

அரிஹந்த் மெத்தை தயாரிப்பு நிறுவனத்தின் இயக்குநர் அமர் பரேக் பிபிசியிடம் பேசுகையில், "இது பூஞ்சைகளுக்கு எதிரானது; அலேர்ஜியை தடுக்கும் மற்றும் தூசு, நீர் புகாது எனவே இந்த மெத்தைக்குள் எதுவும் செல்ல முடியாது," என்றார்.
ஆனால் இந்த விளம்பரம் தற்போது நீக்கப்பட்டுவிட்டது.

"நான் யாருக்கும் தீங்கு விளைவிக்க விரும்பவில்லை," என்கிறார் அவர்.

"விமர்சன்ங்கள் வந்த பிறகு அதை நாங்கள் நீக்கிவிட்டோம் என்கிறார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனா மனித குலத்தின் எதிரி: புதிய பெயர் சூட்டிய உலக சுகாதார அமைப்பு