Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாகிஸ்தானின் முதல் பெண் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்ற ஆயிஷா மாலிக்

பாகிஸ்தானின் முதல் பெண் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்ற ஆயிஷா மாலிக்
, செவ்வாய், 25 ஜனவரி 2022 (11:35 IST)
பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாதில் அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தின் முதலாவது பெண் நீதிபதியாக, 55 வயதான ஆயிஷா மாலிக் பதவியேற்றுள்ளார்.


முஸ்லிம்கள் அதிகமாக வாழும் நாட்டில் அவர் 16 ஆண் நீதிபதிகள் பணியாற்றும் நீதிமன்றத்தில் பெண் நீதிபதியாக பணியாற்றுவார்.

இவரது பதவியேற்பு கருத்து தெரிவித்த சில வழக்கறிஞர்களும் செயல்பாட்டாளர்களும், "பாகிஸ்தானின் ஆண் ஆதிக்க சமூகத்தில் பெண்களுக்கான பிரதிநிதித்துவத்தைப் பெறுவதற்கான பல தசாப்த போராட்டத்திற்குப் பிறகு கிடைத்த அரிய வெற்றி இது," என்று தெரிவித்தனர்.

சில வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகள் ஆயிஷாவின் நியமனத்தை எதிர்த்தனர். ஏனெனில் அவர் நீதிபதி பதவிக்கு முன்மொழியப்பட்ட மற்றவர்களை விட பணி மூப்பில் குறைந்த அனுபவம் உடையவராகக் காணப்பட்டார்.

பாகிஸ்தானின் நீதித்துறை, வரலாற்றுபூர்வ பழமைவாதத்தையும் ஆண் ஆதிக்கத்தையும் கொண்டது. மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் கூற்றுப்படி, இதுவரை பெண் உச்ச நீதிமன்ற நீதிபதி இல்லாத ஒரே தெற்காசிய நாடு இதுவாக இருந்தது.

மேலும், பாகிஸ்தானின் உயர் நீதிமன்ற நீதிபதிகளில் 4% மட்டுமே பெண்கள். பாகிஸ்தான் சட்டக் கல்லூரி மற்றும் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்ற நீதிபதி ஆயிஷா மாலிக், கடந்த இருபது ஆண்டுகளாக கிழக்கு பாகிஸ்தானில் உள்ள லாகூர் உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றினார்.

மாகாணத்தில் ஆணாதிக்க சட்ட விதிகளை சவால் செய்வதில் அவர் ஒரு முக்கிய பங்கை வகித்தார். கடந்த ஆண்டு, பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்களிடம் நடத்தப்படும் பரிசோதனையின் போது "கன்னித்தன்மை சோதனைகள்" என்று அழைக்கப்படும் சர்ச்சை பரிசோதனை முறைக்கு அவர் தடை செய்தார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனா: ஆன்லைனில் மெய்நிகர் சுற்றுலா - இனி இது புதிய வழக்கமா?